Wednesday, 9 September 2015

lifegreatlucky

அன்பு மெய்யுணர்வாளர்களுக்கு, உண்மையை உணரத் துடிக்கும் உங்களது ஆர்வத்தைபாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். இந்த இணைய தளம் எண் கணிதத்துறையிலும் சரி , வாழ்வியல் தொடர்பான துறையிலும் சரி , மாறுபட்ட கோணத்தில் பார்க்கும் ஒரு இணைய தளமாக அமைந்து உங்களது பார்வையில் மிளிர்கிறது. இந்த இணைய தளம் எண் கணித ஆய்வுகள் பற்றியதாகும். உடல், மனம், உயிர் பற்றிய கருத்துக்களை வெளிப்படுதும்படியாக அமைந்துள்ளது. அணுவைத்துளைத்து , அண்டத்தை விலக்கி , ஆதியை உணரும் ஒரு இணைய தளமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. காந்த தத்துவத்தில் ஒரு புது பரிமாணத்தை இங்கு காணலாம்.பரிணாம வளர்ச்சியை டார்வின் 1858 - ஆம் ஆண்டு 24 - ஆம் தேதி நவம்பர் மாதம் 1998 -ஆம் ஆண்டு வெளியிட வேண்டும் என்ற அறிவின் உந்துதலால் அதே தேதியில் வெளியிடுகிறேன். டார்வின் நூலிளிறிந்து 140 - வது ஆண்டில் மக்கள் அமைதியோடும், ஆனந்தத்தோடும் வாழ வழிவகுக்கும் ஒரு நூலாக "தங்கப்புதையல்" என்ற நூல் வெளிவந்துள்ளது. இந்த நூலில் உள்ள ஆய்வுகள் அனைத்தும் எல்லா நாட்டினருக்கும் பொருந்தக்கூடியது. எண் கணிதம் பற்றிய விரிவான நூல் பின்னர் வெளியிட உத்தேசித்துள்ளேன். அந்த விரிவான நூலில் சரி செய்யும் முறைகளும் வெளியிடப்படும். இன்று வந்து கொண்டிருக்கும் அரைகுறையான நூல்களைப் படித்து அவரவர்கள் தாமே சொந்தமாக பெயரை திருத்தி வைத்துக் கொண்டு துன்பப்படுவதை அவர்கள் நேரிலேயே என்னிடம் கூறி வருந்தியுள்ளனர். எண் கணிதம் ஒரு கடல். இந்த கடலில் மூழ்கி ஆழம் கண்டவர்கள் இதுவரை இல்லை எனலாம். ஒரு சில புத்தகங்களைப் படித்து விட்டு எண் கணிதமே அவ்வளவுதான் என எல்லை கட்டிக்கொண்டு தன் இஷ்டப்படி பெயரை திருத்திகிக் கொள்வது என்பது துடுப்பில்லாத படகில் பயணம் செய்வது போன்றதாகும். காற்றுப் போகும் திசைக்கு அடித்து செல்லும், கவிழ்ந்து உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். ஆகவே இது போன்ற செயல்களை நீங்களும்செய்யாதீர்கள். காந்த தத்துவ இயக்கமே இப்பிரபஞ்சம் முழுமையும் இயக்கமாகும். இந்த காந்த தத்துவ செயல்பாடுகளை விரிவாக தெரியப்படுத்த வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தாலும், இந்த இணைய தளம் "பெயரினுடைய" முக்கியத்துவத்தை விளக்குவதாகும், எதிர்பாராத விபத்திலிருந்து தற்காத்துக் கொள்ளவும் ஆகிய இரு கருத்துகளை மையமாக வைத்து ஆய்வின் விளைவை வெளிபடுத்த எண்ணியதால் காந்த தன்மையைப் பற்றி முழுமையாக எழுதவில்லை. காந்த தத்துவ நூல், வரிவாக இது தனி நூலாக வெளிவரும். இந்த இணைய தளம் இவ்வுலக அரங்கில் மாபெரும் முக்கியத்துவம் பெரும் என நம்புகிறேன். இந்த இணைய தளத்தை முழுவதுமாக நன்றாகப் படித்து பெயரின் முக்கியத்தை அறிந்து மற்றவர்களுக்கு கூறும் பொறுப்பு இந்த இணைய தளத்தில் படிக்கும் வாசகருடைய கடமையாகும். காரணம் அவர்களுடைய வாழ்வில் உள்ள பிரச்சனைகளைத் தீர்த்து கொள்ள நீங்கள் உதவியாக இருந்தால் இச்சமுதாய நலனில் அக்கறை கொண்டவராகவும், எண் கணிதப் பயன்பாட்டை அறிந்தவராகவும், ஆகின்றீர். இந்த இணைய தளத்தில் குறிப்பிட்டபடி எதிர்பாராத விபத்தினால் மரணம் என்று குறிப்பிட்ட எண்களை இன்சியழிலோ, பெயரிலோ மொத்த எண்ணிலோ,8,16,17,18,22,29,31,35,38,44,48,49,53 எண்கள் வருமானால் உடன் எண் கணித நிபுணரை தொடர்பு கொண்டு பிறந்த தேதி, விதி எண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்பனவற்றை அடிப்படையாக கொண்டு பெயரை சரி செய்து கொள்வதன் மூலம் விபத்தை தவிர்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment