Wednesday, 9 September 2015

இன்ப துன்ப நிகழ்ச்சிகளுக்கெல்லாம் நம் பெயரே காரணமாக உள்ளது.


விதியை மதியால் வெல்லலாம் எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு- குறள் 467 எண் கணிதம் என்றால் என்னவென்று எவரும் அறியாமல் நீண்டநெடும் காலமாக இருந்ததுண்டு. சாமானியர்கள் மட்டுமே அவற்றை உணர்ந்து அதன் பயன் அறிந்து, முழுமையாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது உள்ளங்கையில் தெரிகின்ற நெல்லிக்கனியைப் போன்ற உண்மை சம்பவங்களாகும். முழுமையாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது அவர்கள் மீது சுமத்துகின்ற குற்றமல்ல! எண்கணிதம் என்றால் என்ன? அதன் பயன் யாது? என்பதை உணர்ந்தவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். இங்கே என்னுடைய நோக்கம் என்னவெனில்! சமுதாயத்தில் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் மட்டுமே பயன் அடைந்து கொண்டால் போதாது. அவை சாதாரணமானவர்களையும் சென்றடைய வேண்டும், இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் மிக சாதாரணமானவர்களையும் சென்றடைய வேண்டும் என்பதே என்பேரவா! இதில் மிகை ஏதுமில்லை. இதன் விழிதோன்றலே இப்பொழுது உங்கள் கரங்களில் தவழ்ந்து கொண்டு இமைகளுக்கு விருந்தாக, உங்கள் வாழ்க்கைக்கு ஒரு திருப்பமாக அமைய இருக்கின்ற நான் கண்டெடுத்த "தங்கபுதையல்" ஆகும். எண் கணிதம் என்பது நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துகின்ற கணக்கு முறையல்ல! ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக குறிப்பிட்ட எண்கள் நிர்ணயிக்கப்பட்டு, அந்த எண்கள் மூலமாக ஒருவரின் பிறந்த தேதிக்கும் அவரின் பெயருக்கும் உள்ள தொடர்பு கணக்கிடப்பட்டு அவை கோடிட்டு கண்டறிந்து நல்லவை என்பனவற்றை எடுத்துக் கொண்டு தீயனவற்றை நம்மிடம் இருந்து அகற்றிக்கொள்வதுடன், செல்லும் விழி புரியாமல் தவிக்கும் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதுடன், தீராத நோய்களில் இருந்து விடுவித்து கொள்வதும், உயிருக்கே கேடு விளைவிக்கிற பேராபத்துக்களில் இருந்து நம்மை காத்து கொள்வதுமே எண் கணிதமாகும். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவசியமான பாதுக்காப்பு கவசம் என்று எண் கணிதத்தைச் சொல்வது மிக பொருத்தமாகவே உள்ளது. எண் கணிதத்தால் தீர்க்கபாடாத பிரச்சனை என்று எதுவும் இல்லை. நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் இன்ப துன்ப நிகழ்ச்சிகளுக்கெல்லாம் நம் பெயரே காரணமாக உள்ளது. இந்த உலகத்தில் பிறந்த எந்த மனிதரும் துன்பப்பட வேண்டும் என்பதற்காக பிறக்கவில்லை. எல்லா இன்ப துன்பங்களுக்கும் பெயரே காரணமாக உள்ளது. ஆகவே இந்த மாபெரும் சக்தி பொருந்திய எண் கணிதத்தை முறைப்படி பயன்படுத்த, அதை கடைபிடிக்க முன்வருதல் வேண்டும். இது கடினம் என்றோ, இயலாது என்றோ சொல்வதற்கு ஏதும் இல்லை. மிகவும் எளிமையே! பிறந்த தேதியும் பெயரும் இருந்தால் போதுமானது. அவ்வாறு பிறந்த தேதி இல்லை என்றாலும் உங்கள் உடலில் உள்ள கிரகங்களின் ஆதிக்கத் தன்மையை உணர புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட "அட்சயா ஸ்கேன்" மூலம் மிகத் துல்லியமாக 100% அதிர்ஷ்டத்தை பெற்று வாழ்வாங்கு வாழலாம். ஒவ்வொருவரின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்திவிடலாம். இது மட்டும் அல்ல வியாபாரம், சுபகாரியங்கள் தொடர்புடைய அனைத்து விபரங்களையும் மிக அருமையாக எண்கணிதம் வாயிலாக வலமானதாக, வலிமை உடையதாக உருவாக்கலாம். "விதியை மதியால் வெல்லலாம்" துன்பம் என்னும் விதியை எண் கணிதம் என்கின்ற மதியால் வெல்லலாம். உள்ளத்தால் உயர்வோம்! அல்லதை விடுவோம்!! எண்கணிதத்தால் வளர்வோம்!!! வாழ்க வளமுடன்!!! எது வாழ்க்கை? பெற்றோரின் இச்சையால் பிறந்தோம், வளர்ந்தோம், உண்டோம், உறங்கினோம், மணமுடித்தோம், பிள்ளைகளை பெற்றோம், இறந்தோம். இதுவா வாழ்க்கை? சிந்தியுங்கள் இச்செயலை 5 அறிவுள்ள ஜீவன்களும் தான் செய்கின்றது. பிறந்து, வளர்ந்து, பிற உயிர்களை கொன்று சாப்பிட்டு இனப்பெருக்கம் செய்து சாகின்றது. இதற்கும் நமக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன? எல்லாம் விதிப்படியே நடக்கும் என்று கண்மூடித்தனமாக தனக்கு தானே குழிதோண்டிக் கொள்ளக்கூடிய நிலை இன்னும் தொடர்கின்றது. எல்லாம் விதிப்படியே நடக்கும் என்றால் நாம் ஏன் தொழில் செய்யவேண்டும். சம்பாதிக்கவேண்டும்? எல்லாம் விதியே தரும் என்று சும்மா வீட்டில் படுத்து உறங்கவேண்டியது தானே? எல்லாம் விதிப்படியே நடக்கும் என்றால் பழைய முறைப்படியே நடப்போம் என்றால் நாம் இன்று நாகரீகமாக கருதும் தொலைபேசி டி.வி.,வீடியோ,இன்டர்நெட் என உலகம் முழுவதும் தொடர்பு கொள்ள கூடிய சாதனங்கள் வந்திருப்பதை உபயோகப்படுத்தக் கூடாது. மாவரைக்கும் இயந்திரம், மிக்ஸி, கேஸ், வாஷிங் மிசின், குளிர்சாதன பெட்டி என இவைகளும் கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருந்திருக்கும். பழைய முறைப்படியே நடப்போம் என்று இன்னும் ஆட்டுக்கல்லில் மாவரைத்துக் கொண்டும், அம்மிக் கல்லில் சாந்து அரைத்துக் கொண்டும் இருந்தால் விஞ்ஞானம் வளர்வது தான் எப்படி? இதில் யார் அறிவாளிகள். மிக்ஸியும், கிரைண்டரும் உபயோகித்து சில நிமிட நேரங்களில் வேலையை முடிப்பவரா? பல மணி நேரம் உடல் நோக துன்பப்படுபவரா? எனில் முன்னவர் அறிவாளியாவார். ஆனால் இன்னும் சிலர் தர்க்கம் செய்பவர் அம்மி ஆட்டுக்கால் உபயோகிப்பது உடலுக்கு உடற்பயிற்சியாக அமையும் என்று கூறுவர். அவர்களும் சிந்தியுங்கள். முன்னோர்கள் சத்துள்ள உணவை உண்டு வாழ்ந்ததால் அவர்களுக்கு அம்மியும், ஆட்டுகல்லும் சாத்தியமாக இருந்தது. இப்பொழுது இருப்பவர்களுக்கு சத்துள்ள உணவு கிடைக்கிறதா? சிந்தியுங்கள். மேலும் உடற்பயிற்சி செய்வதற்கு ஆயிரம் வழிகள் உண்டு. ஆயிரம் ஆசிரியர்கள் உண்டு. அம்மி, ஆட்டுக்கல் அரைத்துதான் உடற்பயிற்சியை பெறவேண்டும் என்பதில்லை. இதை போன்றது தான் எண்கணிதமும். முன்னொரு காலம் தொட்டு நடைமுறை வாழ்க்கையில் ஒரு சாரர் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்த ஒரு கலை சாதாரண மக்களுக்கும் பயன்பெற வந்திருப்பதை எண்ணி அகமகிழ்ந்து ஏற்றுக் கொண்டு நன்மைகள் அடைவதை விட்டுவிட்டு பழைய திண்ணை பேச்சுப் பேசி காலத்தையும், நேரத்தையும் வீணாக்காதீர்கள். நாம் துன்பப்படுகிறோமென்றால் பாவத்தின் விளைவுகள் என்பர். அதாவது பாவிகள் என்பர். நாம் பாவிகள் என்றால் நம்மை இயக்குபவன் ஒருவன் இருப்பான் அல்லவா? அவன் யார்? என்றால் அவன்தான் கடவுள். அவன் எங்கே? என்றால் அவன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான் என்றால் நம்முள்ளும் அவன்தானே இருக்கிறான். சற்றே சிந்தியுங்கள்! நாம் பாவிகள் என்றால் நம்முள் இருக்கும் கடவுளும் பாவிதானே! நம் கருத்துப்படி கடவுள் பாவி இல்லை. அப்படி என்றால் பாவிகள் யாரும் இல்லை. பாவப்பட்டவர்களும் யாரும் இல்லை. துன்பப்படுவதற்காக யாரும் பிறக்கவில்லை. பிறந்தவர்கள் அனைவரும் இன்பத்தை அனுபவிப்பதற்கே பிறக்கின்றனர். துன்பத்தை அனுபவிப்பதற்கு அல்ல. கர்ம பலன்கள்(Benefits of Karma) கர்ம பலன்கள் மூன்று. அவை பிராரப்திய கர்மம். சஞ்சித கர்மம், ஆகாமிய கர்மம் என்பதாகும். அதாவது சஞ்சித கர்மம் என்பது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டனார், முன்னோர்கள் செய்த பாவ புண்ணியங்களாகும். பிராரப்திய கர்மம் என்பது நம் இன்றைய வரை செய்த செயல். ஆகாமிய கர்மம் என்பது இவ்விரண்டும் பாவ புண்ணியங்களின் விளைவுகள் ஆகும். நம் வாழ்க்கையில் நாம் பிறக்கக்கூடிய தேதியை, நேரத்தை, நிர்ணயம் செய்வது கர்மப் பலனே ஆகும். உதாரணமாக ஒருவன் காலை 6-00 மணி முதல் 12-00 மணி வரை பிறந்திருப்பான் என்றால் அவன் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக இருப்பான். கஷ்டம் தோல்வி என்பதே கிடையது. அவன் செய்யும் செயல்கள் யாவும் வெற்றியை கொடுக்கும். அதே போல் மதியம் 12-00 மணி முதல் மாலை 6-00 மணி வரை பிறப்பவர் வாலிபப் பருவம் வரை, வெற்றி, தோல்விகளை அனுபவித்து அவ்வனுபவ அறிவை பாடமாக்கி பின் வாழ்வில் முன்னேறுவர். வாலிப பருவம் முதல் அதிர்ஷ்டமாக இருக்கும். மாலை 6-00 மணி முதல் 12-00 மணி வரை பிறப்பவர்கள் பெற்றோரின் ஆதரவில் வளர்ந்து, அவர்களிடம் கற்று, பல திருப்பு முனைகளை கண்ட பிறகு திருமண நாள் முதல் முன்னேற்ற மேற்படும். குழந்தை பிறந்ததிலிருந்து மேலும் அதிர்ஷ்டகரமாக இருக்கும். இரவு 12-00 மணி முதல் காலை 6-00 மணி வரை பிறப்பவர் அவருக்கு குழந்தை பிறந்ததிலிருந்து அதிர்ஷ்டம் பெறுவர். அதுவரை எதிர் நீச்சலிட்டு போராடும் நிலை இருக்கும். இதைபோல் அவன் பிறக்கும் நேரத்தை கர்ம பலன் நிர்ணயம் செய்கிறது. ஆகவே நாம் நல்லதையே நினைத்து, நல்லதையே பேசி, நல்லதையே கேட்டு, நல்ல செயல்களை மேற்கொள்வோமானால் நம் சந்ததியினருக்கு பயன்தருவதோடு அல்லாமல் இந்த உலகத்திற்கும் நன்மை தரக்கூடியது ஆகும். நல்ல செயல்கள் என்பது எது என்றால் தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திற்கோ, பிற்காலத்திற்கோ, உயிருக்கோ, மனத்திற்கோ, தீங்கு செய்யாத எச்செயலும் நல்ல செயல்களே என வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ளார். இந்த நல்ல செயல்களை நாம் ஆராய்ந்து செய்வதே நம் ஆறாவது அறிவின் பயனாகும். உண்ண, உறங்க, உடுத்த என்று ஐந்தறிவுள்ள செயல்பாட்டை தவிர்த்து, ஆறறிவுள்ள மனிதனாக வாழ முயற்சி செய்வோம். இந்த நன்மை நம் குடும்பத்திற்கு மட்டுமல்ல இந்த உலகத்திற்குமேயாகும். மக்கள் ஏன் துன்பப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு பல அறிஞர்களும், ஞானிகளும், சித்தர்களும் முயன்று சரியானபதிலை கூறமுடியவில்லை. அவர்கள் அனைவரும், கர்மா என்ற ஒன்றையே கூறிவந்தனர். கர்மபலன் என்பது ஒரு பகுதியே, முழுமையானது அல்ல. நாம் பிறக்கும் நேரத்தையும், பிறக்கும் நாளையும், கர்ம பலன் தான் நிர்ணயம் செய்கின்றது. அந்த கர்மபலனின்படி பிறக்கும் ஒவ்வொரு மனிதர்களும் குறிப்பிட்ட சுகங்களை அனுபவிக்க கூடியவர்களாகவும், எத்தகைய குணாதிசயங்கள் பொருந்தியிருப்பார்கள் என்பதை கர்மபலனே நிர்ணயம் செய்கின்றது. ஆனாலும் கர்மபலன் மட்டுமே நம் வாழ்க்கையை நிர்ணயிப்பதில்லை. உதாரணமாக ஒரு குடும்பத்தில் 4 பேர் அண்ணன், தம்பிகள் உள்ளனர் எனில், ஒரு தாய் தந்தையின் கர்மாவை வைத்து பிறக்கின்றனர். அவர்கள் 4 பேருக்கும் ஒரே கர்ம பலன் மட்டுமே இருக்க முடியும். இவர்களுக்கு இன்பமோ, துன்பமோ வசதியோ, வசதி இல்லாத நிலையோ ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் ஏன் ஒருவன் பணக்காரனாகவும் ஒருவன் ஏழையாகவும், ஒருவன் ஏற்றதாழ்வுகளை சந்தித்த வண்ணமும், ஒருவன் சமுதாயத்தில் குற்றவாளியாகவும் என நான்கு பேரும் பல்வேறு நிலைகளில் இருப்பதற்கு காரணம் என்ன? என சிந்தித்தால் கர்மபலன் மட்டுமே காரணமல்ல. கர்மபலன் நாம் செல்லக்கூடிய இலக்கை காண்பிக்கிறதே ஒழிய அடைவதும், அடையாததும், கர்மப் பலன் வாயிலாக அறிய முடியாது. அதற்குமேலும், சிந்தித்தோமானால் நம்மை வழி நடத்தி செல்லக்கூடியதும். இன்பதுன்பங்களை அனுபவிக்க செய்யக்கூடியதும், இலக்கை அடைய (அ) அடையாமல் செய்யக் கூடியதுமான சர்வ வல்லமை படைத்த சக்தி எதுவென்றால் நமது பெயரே ஆகும். கர்மப்பலன் நமக்கு வழியை காட்டினாலும், நம் கையை பிடித்து இழுத்துச் செல்லக்கூடிய அற்புத சக்தியாக நம் பெயர் உள்ளது. ஆகவே தான் "பெயரை சர்வ வல்லமை படைத்த சக்தி" என்று கூறுகிறோம். கர்ம பலன் தோற்றத்திற்கு காரணகர்த்தாவாக இருந்தாலும், இந்த அறிவை, மனதை, உயிரை, இயக்கக்கூடிய மறைபொருளாக இருக்கும் பெயரை அதன் வலிமையை, ஞானிகள், விஞ்ஞானிகள் மத்தியிலும் வைக்கிறேன். பிரபஞ்ச இயக்க ஒழுங்கு (Order to enable the Universe) இன்றய விஞ்ஞான உலகத்தில் எண் கணிதம் பிரமிக்கத்தக்க வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கிறது என்றால், இது இந்த உலகத்தில் மாற்றத்தை வெளிக் கொணர்வதற்கான ஒரு காலக்கட்டம். இந்த சமுதாயம் ஒரு ஆச்சரியமான வளர்ச்சியை எண் கணிதம் வாயிலாக அடையபோகிறது என்பதில் ஐயமில்லை. இப்பிரபஞ்சத்தில் நடக்கும் எச்செயலும் எதேச்சையாக நடப்பவை அல்ல. அவை யாவும் திட்டமிட்டு நடக்க கூடியதாகவே நடந்து கொண்டிருக்கிறது. அன்றைய ஞானிகளும், முனிவர்களும் இக்கணக்கினைக் கொண்டு நடக்கபோகும் நிகழ்ச்சிகளை முன் கூட்டியே அறிவின் துணை கொண்டு வெளிப்படுதினர். அன்றைய ஞானிகளும், இன்றைய விஞ்ஞானிகளும், ஏற்றுக்கொள்ளும் ஒரு கலையாக எண் கணிதம் வளர்ந்து வருகிறது. பூமி தன்னை தானே மணிக்கு 1000 கி.மீ வேகம் சுழன்று கொண்டு, சூரியனை 365 நாட்களில் மிக துல்லியமாக ஒரே வட்டப்பாதையில் சுழன்று கொண்டு இருக்கிறது. பூமியை சந்திரன் 30 நாட்களுக்கு ஒரு முறை சுழன்று கொண்டும், அதைப்போல் அண்ட வெளியிலுள்ள அனைத்து கிரகங்களும் தன்னைத்தானே சுழன்று கோண்டும், இருக்கிறது. தன் பாதையைத் திருத்திக் கொண்டோ, மாறியோ செல்வதில்லை. இந்த கிரகங்களின் கதிர்கள் நம் பூமியை ஆதிக்கம் செலுத்துவதைப் பொருத்து நம் எண்ண அலைகளும், செயல்பாடுகளும் மாற்றங்களும் நடைபெறுகின்றன. அண்ட வெளியிலுள்ள அனைத்து கிரகங்களும் எப்படி ஒழுங்கு மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றனவோ அதே போல் இவ்வுலக தோற்றமும் ஒழுங்கு முறையிலானவை. NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS ARULNIDHI AKSHAYADHARMAR,B.SC.,M.A.,M.PHIL.,DNYT SAMYAPURAM,ARCH OPP, SAMYAPURAM,TRICHY-621112. CELL:9842457516,www.srkmahan.com EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in

No comments:

Post a Comment