SPECIALIST IN : LUCKY NAME ,LUCKY HOUSE,LUCKY STONES,
CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST
ARULNIDHI AKSHAYADHARMAR 9842457516
SAMYAPURAM,ARCH OPP, SAMYAPURAM,TRICHY-621112.
CELL:9842457516,
web:http://akshayadharmar.blogspot.com
உங்களை சரிசெய்து கொள்ளுங்கள்
நாம் அன்றாட வாழ்வில் பல ஆய்வுகளை நடத்திக் கொண்டுதான் இருக்கிறோம். நமக்கே தெரியாமல் சற்று கூர்ந்து கவனித்தால் தெரிய வரும். இந்த வாழ்கையே நாம் அனுபவிப்பதற்காகத்தான். பிறக்கும் எவ்வுயிரும் துன்பப்படுவதர்க்காக பிறப்பதில்லை. இது இயற்கையின் சட்டம். இந்த சட்டம் சரியாகத் தான் உள்ளது. நாம் அமைக்கும் வட்டம் தான் சரியாக உள்ளதா என அறிந்து சரியாக இருந்தால் போற்றுதற்கு உரியது. சரியில்லை என்றால் அதை சரி செய்து கொள்வதற்கான நிலையை ஏற்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
நாம் அமைக்கும் வட்டம் என்பது நம் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கையில் இருந்தது. அனால் இன்று நம் கையில் இந்த நிலை கிடைத்திருப்பதைத் தான் தங்க புதையல் என்ற முன்னொரு நூலில் குறிப்பிட்டிருந்தேன்.
ஆம் ! இறைவனுடைய படைப்பில் எந்த குறையுமில்லை. சற்றே சிந்தித்துப் பாருங்கள். இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றதே. எதிலிருந்து தெரியுமா? சுத்த வெளி என்ற நிலையிலிருந்து பரிணாம தத்துவத்தின் அடிப்படையில் சற்றே திரும்பிப் பார்த்தல் உண்மை எதுவென விளங்கும் உங்களுக்கும் தெரிந்த விஷயம்தான் சற்று ஞாபகப்படுத்தி கொண்டால் மேற்கொண்டு செல்ல வசதியாக இருக்கும்.
பிரபஞ்ச ரகசியமே பஞ்சபூதம், நவகிரகங்களும் தான் என தொலைகாட்சியிலும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், கூறிவருகிறேன். இந்த பஞ்சபூதமும், நவகிரகமும் எந்த விகிதாச்சாரத்தில் நம் உடம்பில் சேருகிறதோ அதை பொருத்து நம் உடல் இயக்கப்பெறுகிறது. அதாவது உடல், மனம், சூழ்நிலைகள், உயிர், தொழில் என ஐந்து தன்மைகளும் இயக்கப்பெறுகிறது. இதில் பஞ்சபூதம் உயிர், தொழில் ஆற்றல்களை நிர்ணயம் செய்கிறது. நவகிரகம் உடல், மனம் சூழ்நிலைகளை நிர்ணயம் செய்கிறது. இது போல் அண்டத்தில் இருப்பது யாவும் அண்டத்தில் உள்ளது என்று சித்தர்கள் கூறுவது உண்மையென தெரியவரும்.
அண்டத்தில் உள்ள பஞ்சபூதமும் நவகிரகங்களும் நம் கண்ணில் காணும் பொருட்களாக அமையப்பெற்றுள்ளன. இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கும் விதத்தை நாம் சற்று சிந்தித்து பார்த்தால் இறைவனுடைய செயல் எத்தனை தூய்மையானது சத்தியமானது என தெரியவரும்.
விண்ணிலிருந்து காற்று,
காற்றிலிருந்து நீர்,
நீரிலிருந்து நெருப்பு,
நெருப்பிலிருந்து நிலம்
என்று விண்ணைத் தொடங்கி நிலம் வரை பரிணாம வளர்ச்சி தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. அதே நிலையில் தான் நவகிரகங்களும் பஞ்சபூதங்களால் ஆகி அந்த பஞ்ச பூதங்களின் இயக்கவல்லமையை பொருத்து அந்த கிரகங்களிலிருந்து கதிர்கள் வெளிப்பட்டு கொண்டே இருக்கிறது. அந்த ஒளிக்கதிர்கள் காந்த கிரக அலைகளாக நம் உடலை வந்தடைகிறது.இந்த உடலில் தூய்மை என சொல்லக்கூடிய மையம், சக்கரம் ஒரு டிஷ் ஆண்டனாவை போல் நம் உடலில் உள்பகுதிக்கு இழுத்துச் சென்று மற்ற மையங்களை இயக்கும் நிலையை அமையப்பெறுகிறது. இதுபோன்று அண்டமும் பிண்டமும் ஒன்றுக்குள் ஒன்றாக இயங்கப் பெற்று நம்மையும் இந்த உலகமும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
நவக்கிரகங்களும், பஞ்சபூதமும் எப்படி ஒழுங்கு மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கிறதோ அதே போல் நம் உடலும், மனமும், உயிர், சூழ்நிலைகள் யாவும் ஒழுங்கு மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. எப்பொழுது மனிதன் தனக்கென்று ஒரு முத்திரையாக பெயரைசூட்டி கொண்டானோ அன்றிலிருந்து அவனது உடல், சூழ்நிலைகள், உயிர், தொழில் என அனைத்தும் அவனது பெயரை கொண்டே இயங்கிக் கொண்டிருக்கிறது.
நம் பெயர் எந்தளவிற்கு நமக்கு சாதகமாக அமைகிறதோ அதைப் பொருத்து மேற்கூறிய ஐந்து கூறுகளும் சரியாக இயங்கும். அதாவது இயற்கையோடு ஒன்றி செயல்படும். இயற்கையில் கடவுளின் படைப்பில் எந்தத் தவறுமில்லை. மனிதன் நாம் செய்யக்கூடிய செயலில் தான் தவறு உள்ளது. அது நம் பெயர் மற்றும் வீடுமேயாகும். நம் பெயரையும், வீட்டையும் இறைவன் அமைத்து தரவில்லை. நாம் அமைத்துக் கொள்கிறோம். பெயரை பொறுத்தவரை முந்தய காலத்தில் இருந்து பெரும் பணக்காரர்களும், ராஜாக்களும், பிரபுக்களும், மந்திரிகளும் ஒரு இனத்தவர்கள். எண் கணிதத்தை பயன்படுத்தி பெயர் சூட்டுவிழா என்று முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர். சாதாரண மற்றும் நடுத்தர வசதியுடையவர்கள் அன்றைக்கு வரும் பிராமணர் கூறும் முதல் எழுத்து "வா" என்று வந்திருக்கும் உறவினர்கள், நண்பர்கள் கூறும் பெயர்களில் எந்த பெயர் மனதிற்கு பிடித்துள்ளதோ அதையே சூட்டி மகிழ்ந்தனர். அதே போல் வீடு தன்னிஷ்ட்டபடி அமைத்து வீடு கட்டினர்.
இவ்வாறு தன் இஷ்ட்டபடி செய்து கொண்டு இன்பதுன்பங்களை நாமே வரவேற்றுக் கொள்கிறோம். ஆக இறைவனின் குற்றம் இல்லை. நம் குற்றம் தான். நம் பெயரையும், வீட்டையும் சரியாக அமைத்துக்கொண்டு வாழ்வில் வளம்பெற வேண்டும் என்பதற்காக எண் கணிதம் நியூமராலஜியும், வாஸ்த்து கலைகளும் அமைந்துள்ளது. இந்த கலைகளை நீங்கள் எந்தளவிற்கு பயன்படுத்துகின்றீர்களோ, அந்தளவிற்கு நன்மைகளை அனுபவிக்க முடியும்.
அதாவது பெயரின் மூலம் 70% நன்மைகளையும் வீட்டின் மூலம் 30% நன்மைகளையும் பெறமுடியும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.
ஆகவே நீங்கள் செய்வது இயற்கையோடு ஒன்றி வாழ்வதற்காகன ஒரு நிலையைத்தானே தவிர இயற்கைக்கு புறம்பானதோ, இயற்கையை மீறிய செயலோ இல்லை. இயற்கையின் ரகசியமே பஞ்சபூதமும், நவக்கிரகமும் தான் என்பதை நம் முன்னோர்கள் மிக தெளிவாக அன்று விளக்க முடியாத நிலையில் கோவில்களில் சாமி கும்பிடும்படியான நிலையை ஏற்படிதியுள்ளனர். நம் கோவில்களில் பெரும்பாலும் நவக்கிரகங்களை மையமாக வைத்து, பஞ்சபூதங்களில் ஏதாவது ஒன்றை மையமாக வைத்தும் அமைத்துள்ளனர்.
உதாரணத்திற்கு நவக்கிரகம் ஒவ்வொரு கோவிலிலும் அமைக்கப் பெற்றிருக்கும்.
பஞ்சபூதங்களில் நிலத்திற்கு திருக்காஞ்சி, காற்றிற்கு திருக்காளத்தி, விண்ணிற்கு சிதம்பரம், நீர் திருவானைக்காவல், நெருப்பிற்கு திருவண்ணாமலை என பஞ்சபூதங்களையும் தவிர நடுகோவிலாக அமைத்து இதன் ரகசியங்களை என்று அறிந்து கொள்கிறோமோ, அன்று நம் துன்பங்கள், பிரச்சனைகள் அகலும் என்பதை சூட்சகமாகச் சொல்லி வைத்துள்ளனர்.
இன்றும் இதன் ரகசியங்களை அறிந்துகொள்ளாதிருத்தல் நாம் எப்பொழுதுதான் விழிப்பது. நமது துன்பத்திற்கு கர்மா என்றும், நம் பிறப்பே பாவத்தை கழிப்பதற்கு என்றும் நம்மை துன்பப்படும்படி இறைவனின் கட்டளை என்றும் கூறிக் கொண்டு உனக்கு நீயே குழி தோண்டிக் கொள்ளாமல் படைப்பின் ரகசியத்தை அறிந்து இயற்கையோடு ஒன்றி வாழும் நிலையை பெற்று நீங்களும் சந்தோஷமாக, பிறரையும் சந்தோஷப்படுத்தி மன அமைதியோடு வாழ முயற்சியுங்கள். இதற்கு எண் கணிதம் என்றென்றும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
SPECIALIST IN : LUCKY NAME ,LUCKY HOUSE,LUCKY STONES,
CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST
ARULNIDHI AKSHAYADHARMAR 9842457516
SAMYAPURAM,ARCH OPP, SAMYAPURAM,TRICHY-621112.
CELL:9842457516,
web:http://akshayadharmar.blogspot.com
உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் என்ன செய்வீர்கள். இறைவனின் கட்டளை, கர்மா என்று சும்மா இருப்பீர்களா? இல்லையே! உடனே நல்ல டாக்டரை தேடி போகவில்லையா? அதே போன்றது தான் நமக்கு பிரச்சனைகள் வருகின்றது என்றால் எதனால் வருகின்றது என ஆராய்ச்சி செய்யவேண்டு. எந்த பிரச்சனையும் திடீரென வரமுடியாது.
ஒரு திருமணத்திற்கு செல்கிறோம் என்றால் அங்கு அறுசுவை உணவை கண்டவுடன் நன்றாக சாப்பிட்டு விட்டால் அதாவது அளவுக்கு மீறி சாப்பிட்டு விட்டால் நமக்கு வயிற்றை வலிக்கும், வயிற்றுப் போக்கு ஏற்பட்டு பல துன்பங்களை அனுபவிக்கிறோம். ஆக நாம் செய்த தவறு அதிகமாக சாப்பிட்டது. இதுபோல் நாம் ஏதாவது தவறு செய்தால் தானே தண்டனையை அனுபவிக்கிறோம். இதில் எங்கிருந்து இறைவனின் செயல்பாடுகள் வருகிறது. நம்மை நாம் தான் சரியாக இருக்கிறோமா என சரிபார்த்துக் கொள்ளவேண்டும். என் பெயர் எப்படி உள்ளது? எனது வீடு எப்படி உள்ளது என அறிந்து சரி செய்து கொள்ளவேண்டு.
நல்ல பெயரை அமைத்து கொண்டும், நல்ல வீட்டையும் பெற்று என்றும் ஆனந்தமாக இருக்கக் கூடிய நிலையைதான் அன்று சச்சிதானந்தம் கூறினார்.
சச்சிதானந்தம் = சத்+சித்+ஆனந்தம். சத் என்றால் அறிவு, சித் என்றால் வீடு பேறு அடைதல். அதாவது வீட்டையும் பெயரையும் அடைந்தால் நம் அறிவைக் கொண்டு நல்ல வீட்டையும் பெயரையும் அடைந்தால் என்றைக்கும் ஆனந்தம் நிலைத்து நிற்கும் என குறிப்பிட்டுள்ளனர்.
நல்ல பெயரை, நல்ல வீட்டை முதலில் பெற்றுக் கொள்ளுங்கள் எல்லாம் நன்மையாகவே நடக்கும்.
வீட்டில் வாழும் தேவதை
வீடுகளில் நம்மை சுற்றி எப்போதும் ஒரு தேவதை இருந்து கொண்டே இருக்கிறது. நாம் எதைச் சொன்னாலும் அப்படியே ஆகட்டும் என்ற அந்த தேவதை ஆசீர்வதித்துக்கொண்டே இருக்கும்.
நாம் பேசுவது, சொல்வது, நல்ல வார்தைகளாகவும், மங்கள வாக்காகவும் இருந்தால் அந்த தேவதையும், அப்படியே ஆகட்டும் என்று ஆசீர்வதிக்கும். எனவே எல்லாம் நல்லதாகவே அமையும்.
ஏதாவது ஒருபொருள் இருக்கிறதா என்று கணவன் கேட்டால் இல்லையே என்று மனைவி சொல்லக்கூடாது. நிறைய இருந்தது. மறுபடியும் வாங்கவேண்டும் என்பது போல் சொன்னால் தேவதையும் அப்படியே ஆகட்டும் என்று ஆசீர்வதிக்குமாம். வீட்டில் எந்த பொருளும் எப்போதும் நிறைந்திருக்கும். வீடு எப்போதும் மங்களகரமாகவே இருக்கும். எனவே பேசும்போது நல்ல வார்த்தையாக அனைவரும் பேசுவோம்.
எண் கணிதத்தின் தொன்மை
அகரா முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு (குறள் 1)
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. (குறள் 392)
-திருவள்ளுவர்.
வள்ளுவரின் இவ்விரு குறள்கள் மட்டுமல்லாது
எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தரும்.
- மூதாட்டி ஔவையார்.
எண்ணெழுத்திகழேல்
- பழமொழி.
திருவள்ளுவரின் திருக்குறளும், ஔவையாரின் பொன்மொழியும், பழமொழியும், எண் கணிதத்தின் தொன்மையை நினைவுக் கூறுகின்றது. எண் கணிதம் ஓர் அற்புதக்கலை. இக்கலையை உதாசீனப்படுத்தியும் அறியாமையாலும் அழிபவர்கள் பலகோடி பேர் அந்த அளவிற்கு எண் கணிதம் நம் வாழ்க்கையோடு ஒன்றி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இக்கலை ஏதோ பொழுது போக்கிற்காக உருவாக்கப்பட்டதன்று. வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் செயல்பாடுகளையும் கணக்கிட்டு கூறும் வாழ்க்கை சூத்திரம். ஆம்! எப்படி கணிதத்தில்
(A+B) ² = a²+2ab+b² என்று கூறுகின்றோமோ, அதே போல் நம் வாழ்க்கையையும் ஒரு சூத்திரம் வடிவில் கொண்டு வந்து நம்மை ஒழுங்குப்படுத்தக்கூடிய அமைப்பாகும்.
உன் வாழ்க்கை உன் கையில் என்பது முற்றிலும் எண் கணிதத்திற்கே பொருந்தும் உன்னுடைய பெயரே உனது வாழ்க்கையை நிர்ணயம் செய்கிறது.
எண் கணிதம் 2000-ம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியிருக்க வேண்டும். அதுவும் தமிழகத்தில் மட்டுமே தோன்றியிருக்க வேண்டும். எதை வைத்து கூறுகின்றோமென்றால் முன் கூறிய குறள் எழுதிய திருவள்ளுவர் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அவர் அக்காலகட்டத்திலேயே எண்ணையும் எழுத்தையும் அறிந்து அதன் முக்கியதுவத்தை தனது குறளில் குறிப்பிட்டுள்ளார். எண்ணும், எழுத்தும் இரண்டு கண்களைப் போன்றது என குறிப்பிடுகின்றார். எண் என்பதை வள்ளுவர் பிறந்த தேதியினுடைய எண் என்றும், எழுத்து என்பதை தலையெழுத்து, பெயர் என்றும் குறிப்பிடுகின்றார். அதாவது பிறந்த தேதியுடைய எண்ணும் தலையெழுத்தாகிய பெயரும் ஒன்றையொன்று சார்ந்து சிறப்பாக அமைந்தால் இரு கண்கள் எப்படி ஒளி பொருந்தியுள்ளதோ அதேபோல் நம் வாழ்க்கையும் ஒளி பொருந்தி இருக்கும் என்பதை குறிப்பிடுகின்றார். அதாவது எண்களாகிய பிறந்த தேதி எண்ணும், பெயரும் ஒன்றையொன்று சார்ந்து சிறப்பாக இல்லாவிடில் இரு கண்களும் ஒளியிழந்து பார்வை குறைவாக இருப்பதுபோல் வாழ்க்கையும் போராட்டம் நிறைந்ததாகவும் கஷ்டப்படுவதாகவும் துன்பத்தை தருவதாகவும் இருக்குமென குறிப்பிடுகிறார்.
இந்த ஒரு குறளை மட்டுமே வைத்து எண் கணிதத்தின் தொன்மையை கூறவில்லை அவர் தனது பெயரிலும் திருவள்ளுவர் என்ற பெயருக்கு 46 எண்ணை அமைத்துக் கொண்டுள்ளார்.
T H I R U V A L L U V A R
4 5 1 2 6 6 1 3 3 6 6 1 2 = 46
அதன்படி இவருக்கு நிகரான புலவர் இன்னும் கூட தோன்றவில்லை எனலாம். ஏன் என்றால் அத்தகைய சிறப்பு வாய்ந்த 46 எண்ணை தனக்கு சூட்டி கொண்டுள்ளார். இந்த 46 எண்ணின் உடைய பலன் யாதெனில் எத்துறையில் இவர் நுழைந்தாலும் அத்துறையில் மன்னராக விளங்கக் கூடியது. உயர்ந்த புகழையும் தரக்கூடியது. ஆகவே திருவள்ளுவர் தனது பெயருக்கு 46 எண்ணை அமைத்துக் கொண்டுள்ளார்.
அதே போல் திருவள்ளுவர் தனது நூலிற்கு திருக்குறள் என்ற பெயரும் எண் கணித முறைப்படியே 34 எண்ணை அமைத்துள்ளார்.
T H I R U K K U R A L
4 5 1 2 6 2 2 6 2 1 2 = 34
அதாவது 34 எண்ணினுடைய பலன்படி எக்காலமும் தன் தனித்தன்மையை வெளிப்படித்திக் கொண்டே இருக்கும் என்பதாகும். அதே போல் திருக்குறள் இன்றய காலம் வரை அதனுடைய தனித்தன்மை வெளிப்படுத்தி கொண்டே உள்ளது. காலத்தால் பழையது இக்காலத்திற்கு ஏற்ற ஏதாவது நாகரீக காலத்தில் இன்னும் விஞ்ஞான அதிவேக வளர்ச்சிக் காலத்திலும் அது விலக்கப்படாத நிலையில் தனித்தன்மை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது.
இதிலிறிந்து திருவள்ளுவரின் குறள் 2000 வருடங்களுக்கு முற்பட்டது என்பது உண்மையானால் எண் கணித தோற்றமும் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதில் ஐயமில்லை. மேலும் பெயரை நம் முன்னோர்கள் நட்சத்திரத்தில் வலியாக "இவ்வகை எழுத்தில் ஆரம்பிக்கும்படி பெயர் வை" என்னும் அளவிற்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் தோற்றம் கூற இயலாத அளவிற்கு முந்தயது. மேலும் வாரத்திற்கு 7 நாட்கள் என்பதை கிரகங்களின் வாயிலாக பிரித்து வைத்துக் கொண்டதும் நம் தமிழகத்தில் தான். இங்கிருந்து பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. தமிழ்மொழியின் தோமையை குறிப்பிடும்பொழுது கல்தோன்றி மண் தோன்ற காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடி என்பதை நினைவில் கொண்டு பார்த்தால் தமிழ்மக்களின் தொன்மையை உணரலாம்.
தொலைநோக்கு கருவிகள் பல வந்தும் விஞ்ஞான பூர்வமாக இன்னும் கிரகங்கள் அனைத்தையும் முழுவதுமாக காணமுடியாத நிலையில் அன்று நம் ஞானிகளும். சித்தர்களும், தன் அகதொலைநோக்கி பார்வை மூலம் அனைத்து கிரகங்களையும் கண்டு அவை நகரும் நிலைகளையும் அறிந்து தன்மைகளையும் நம் உடலோடு, உயிரோடு, மனமோடு ஒப்பிட்டு கூறியுள்ளனர். அத்தகைய ஞானிகளால் தான் இந்த எண் கணிதமும் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.
இதிலிருந்து எண்கணிதம் எங்கோ வெளிநாடுகளில் தோன்றியதல்ல, இங்கு அதுவும் தமிழ்நாட்டில் தான் தோன்றியுள்ளது. அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக இன்றைய காலத்தில் உலகமொழியாக உள்ள ஆங்கிலத்தில், தமிழ் எண் கணிதத்தை சார்ந்து தொகுக்கப்பட்டது. தொன்று தொட்ட காலகட்டமுதல் இன்று வரை ஒரு குறிப்பிட்ட சாரர்கள் மட்டுமே பயபடுத்தி வந்த கலை இன்று அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது என்றால் இப்பொழுது வாழும் மக்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு "தங்க புதையல்" எனலாம். ஏனென்றால் அந்த அளவிற்கு எண் கணிதம் நம் வாழ்க்கையோடு ஒன்றி நம்மை வழி நடத்தி கொண்டு செல்கின்றது. எண் கணிதம் ஒரு கலங்கரை விளக்கம் எனலாம். ஏனென்றால் வாழ்க்கை என்னும் கடலில் தத்தளிக்கும் நமக்கு கரையை காட்டக்கூடியதான விளக்கு போன்றது அதாவது நிம்மதியையும் நம் பாதையையும் நினைவுப்படுத்தக்கூடியது.
பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் வாஸ்து
வாஸ்துவுக்கு பெண்களை முக்கியமாக வைத்து பார்க்கப்படுவது எதனால் என்றால் வீட்டில் அதிகநேரம் (அதாவது 24 மணி நேரமும்) பெண்களே இருப்பதால் பெண்களுடைய ஜாதகத்தையும், பிறந்ததேதியையும் வைத்து வாஸ்து படி அமைத்து தருகிறோம்.
வீட்டை பொறுத்த வரை அவர்களுக்கென்று உரிய பாகம் தென்கிழக்கு பாகம். அதற்கடுத்தாற்போல் வடமேற்கு பாகமாகும். அந்த பாகங்களை குறிப்பாக தென்கிழக்கு பாகங்களை சமையலுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
அவ்வாறு தென்கிழக்கில் உள்ள சமையலறையை பயன்படுத்த தவறினால் பெண்களுக்கு சாதாரணமாக அனுபவிக்கும் உரிமை பரிக்கபடும்.
அதேபோல் பெண்களுக்கு நோயினால் துன்பம் அனுபவிக்க கூடிய நிலையை ஏற்படுத்தும்.
அதே நேரம் கட்டிடதிற்கு வெளியே காம்பவுண்டிற்கு உள்ளே தென்கிழக்கு பாகத்தில் போர்வேல் அல்லது கிணறு (அல்லது) சம்ப் என போட்டால் அந்த வீட்டில் உள்ள பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டு. வீட்டிற்கு விளக்கேற்ற பெண் இல்லாமல் போகும்.
SPECIALIST IN : LUCKY NAME ,LUCKY HOUSE,LUCKY STONES,
CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST
ARULNIDHI AKSHAYADHARMAR 9842457516
SAMYAPURAM,ARCH OPP, SAMYAPURAM,TRICHY-621112.
CELL:9842457516,
web:http://akshayadharmar.blogspot.com
தென்கிழக்கு மூலை அக்னி மூலை என்பதால் அந்த மூலையில் எந்த ஒரு நல்ல பொருளும், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வைத்தாலும் பணப்பெட்டி வைத்தாலும், ஒன்றுக்கும் உபயோகமின்றி வீணாகும். தெற்கு சார்ந்த தென்கிழக்கில் வாசல்படி வைக்கலாம். கிழக்கு சார்ந்த தென்கிழக்கில் வாசல்படி வைக்கக்கூடாது.
வற்றாத செல்வத்திற்கு கைகொடுக்கும் வாஸ்து
வாஸ்துவைப் பற்றி பார்க்கும் பொழுது குறிப்பாக இரண்டு விதமானது. ஒன்று, மனையை தேர்வு செய்து அடிக்கல் நாட்டி தளம் போடும் வரை உள்ளது. மனையடி சாஸ்திரம் ஆகும். மனையடிக்கு மேல் கட்டிடம் கட்டுவது என்பது வாஸ்து சாஸ்திரம் என்றழைக்கப்படும்.
இதில் சாஸ்திரம் பார்ப்பது என்பது நமது முன்னோர்கள் நல்லதோ, கெடுதலோ அனுபவித்து அனுபவத்தின் மூலமாக தான் பெற்ற இன்பத்தை அனைவரும் பெற வேண்டும் என்பதற்காகவும், தான் பெற்ற துன்பத்தை யாரும் அனுபவிக்க வேண்டாம் என்பதற்காக தான் சாஸ்திரம் நிறுவப்பட்டது.
அந்த அடிப்படையில் இன்று வாஸ்து சாஸ்திரம் என்னிலடங்காத மக்களை சந்தோஷப்படுத்தியும், முன்னேற்றத்தை அனுபவிக்கவும் ஒரு விழிகாட்டியாக அமைந்துள்ளதில் முக்கிய பங்கு வாஸ்துவுக்கும் உண்டு. பொதுவாக வீடு என்பது செங்கற்கலால் கட்டப்பட்டதல்ல. இதயங்களால் கட்டப்பட்டது. வீட்டிற்கு பேசும் சக்தி உண்டு.
அதன் மொழி நமக்கு புரியாததாலும் நம் காதுகளுக்கு எட்டாத ஓசையாக அமைந்துள்ளதால் அதை ஜடம் என எடுதுக் கொள்ளக்கூடாது.
ஒரு வீடு அவருக்கு பொருத்தமாக அமைந்தால் அது போன்று வாழவைக்கக் கூடியது ஒன்றுமில்லை. ஒரு வீட்டோடு ஒப்புமையாகாத போது கெடுப்பதும் நிகழும். சாதாரணமாக ஒரு நபருடன் பழகும்பொழுது சிலரிடம் நாம் நம்மையறியாமல் வெகுநேரத்தை எடுதுக் கொண்டு பழகுவோம்.
அத்தகைய பழக்கத்தை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டோம். அதே போன்று தான் வீடும். குறிப்பாக ஒரு வீட்டில் கீழக்கு மற்றும் வடக்கு பாகங்களில் அதிகமாக இடம் விட்டு கட்டுதல் லெட்சுமி கடாட்சத்தை ஏற்படுதுவதோடு இன்னும் அதிர்ஷ்டத்தை கூட்டு விக்கும்.
மேலே கூறியுள்ளது போல் மனையில் கிழக்கு, வடக்கு புறம் அதிகமான இடத்தை விட்டு கட்டுவது சிறப்பானது. மேற்கு, தெற்கு பகுதியில் அதிகமான இடம் விடுவது உடலுக்கு கெடுதுதலை தரும். குறிப்பபாக மேற்கில் அதிகமான காலியிடம் இருதய வால்வுகளால் பாதிக்கப்படும். தெற்கில் மிகுதியான இடம் காலியாக விட்டால், இருதய பலஹீனம், இருதய பாதிப்புகள் ஏற்படும். இவ்வாறு அநேகம் பேர் வீடுகளில் பரம்பரையாக இருந்து வருபவர்கள் முதலில் சரிசெய்துகொள்ள வேண்டும்.
இல்லையென்றால் பரம்பரை வியாதியென நினைத்து கொண்டு அடுத்தடுத்த தலைமுறைகள் பாதிக்கப்படும். இதே போன்று கிணறுகளை வடக்கு, கிழக்கு சார்ந்து, வடகிழக்கு பாகங்களில் தான் போட வேண்டும்.
இவ்வாறு இல்லாமல் தென்கிழக்கில் கிணறு அமைந்தால் அவ்வீட்டில் பெண்கள் எப்பொழுதும் வியாதிக்கு உள்ளாகி இருப்பார்கள்.
வடகிழக்கு, வடக்கு, கிழக்கு பாகங்களில் ஆழ்குழாய் கிணறுகளோ, கீழ்நிலைத் தொட்டிகளோ, செப்டிக் டேங்குகளோ இருந்தால், வீட்டில் மகிழ்ச்சி என்றும் நிலவும், லெட்சுமி கடாட்சம் மிகுந்து இருக்கும் எந்த கெடுதலான விளைவுகளிலிருந்தும் தற்காத்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் அந்த வீட்டிற்கு இருக்கும்.
இதைப் போல வாஸ்துவைப் பற்றி விரிவாக தனி ஒரு நூலாக வெளியிட உள்ளேன்.
SPECIALIST IN : LUCKY NAME ,LUCKY HOUSE,LUCKY STONES,
CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST
ARULNIDHI AKSHAYADHARMAR 9842457516
SAMYAPURAM,ARCH OPP, SAMYAPURAM,TRICHY-621112.
CELL:9842457516,
web:http://akshayadharmar.blogspot.com
No comments:
Post a Comment