Thursday, 10 September 2015

நல்லதே நினைப்பவருக்கு ஏன் கெடுதல் மட்டுமே நடக்கிறது ?


பிரபஞ்ச தோற்றம் - பஞ்ச பூதங்களின் தோற்றம் அண்ட கோடியிலுள்ள அனைத்து கிரகங்களும் அணுக்களின் கூட்டமேயாகும். இவ்வணுக்களின் கூட்டம் சுத்த வெளியின் வெளிப்பாடாகும். சுத்த வெளி என்பது இயங்காத நிலை. இயங்காத நிலையிலுள்ள ஓர் அணு இயங்கும் நிலைக்கு தற்சுழற்சி காரணமாக வெளிப்படும் போது இயங்கும் நிலை உருவாகிறது. அது சக்தி அணு எனப்படும். இந்த சக்தி அணு தற்சுழற்சி, வேகம், பருமன் இவற்றின் துணை கொண்டு பல அணுக்கள் உருவாகின்றது. இவ்வணுக்களுக்கு இரண்டு காந்த தன்மைகள் உண்டு. தள்ளும் சக்தி, ஈர்க்கும் சக்தி என்பதாகும். இதையே நம் முனிவர்கள் அன்றைய மனிதர்களுக்கு விளங்காத காரணத்தால் காந்தத்திற்கு இரண்டு தன்மை தள்ளும் சக்தி, ஈர்க்கும் சக்தி. இதையே கந்தனுக்கு இரண்டு மனைவி வள்ளி, தெய்வானை என்று குறிப்பிட்டனர். காந்தன் காலத்தால் மருவி கந்தனானார். அதே போல் சிவ சக்தி என்பதும், சிவனின் தன் பாதி சக்தி என்று கூறுவதன் உள்நோக்கம், இயக்கமற்ற சிவனுள் இயங்கும் சக்தி தன் பாதி என கூறப்பட்டது. இச்சிவனை இயக்கமற்றவன் என்பதை சுத்த வெளி என்பர். இயங்கும், சக்தி களம் என்பது அண்ட கோடியில் அமைந்திருக்கும் கிரகங்கள், ஜீவராசிகள் அனைத்துமாகும். கிரகங்களின் தோற்றமும், அதன் சுற்று வட்டபாதைகளும் அது செல்லும் வேகமும் ஒரே மாதிரியானதாகும். அணுக்களின் கூட்டமே கிரகங்களாகும். அணுக்கள் ஒன்றோடொன்று மோதியும், விலகியும் அதாவது ஈர்க்கும் சக்தியையும், தள்ளும் சக்தியையும் கொண்டு அதிகமாக அவைகளும் இரு சக்திகளை மையமாக வைத்து இணைந்து கிரகங்கள் தன் வட்டப்பாதையில் தன்னை தானே சுழன்று கொண்டு தன் பாதையில் நகர்ந்தும் பிசகாமல் சூரியனை மையமாக வைத்து சுழன்று கொண்டு வருகிறது. பஞ்சபூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, விண் ஆகிய அனைத்தும் அணுக்களின் கூட்டமேயாகும். இவற்றில் முதலில் தோன்றியது விண் ஆகும். பிறகு காற்று, அடுத்ததாக நீர், நெருப்பு, நிலம் என்பதாகும். கிரகங்கள் அனைத்தும் சக்தி களம் முழுவதும் ஒரு வட்ட வடிவமான ஒரு அமைப்பாகும். அவற்றில் விண் என்ற அணுவிலிருந்து வெளிப்படும் அதிர்வலைகள், விண்கல் தன்னுள் மோதிக்கொண்டு காற்றை வெளிப்படுதுகின்றன. இக்காற்றானது மையத்தை நோக்கி விரைந்து வரவர அதன் அடர்த்தி அதிகமாகி ஆக்ஸிஜன் அதாவது நாம் சுவாசிக்கும் காற்றாக அமைகிறது. இதனையே நம் விஞ்ஞானிகள் பூமியிலிருந்து 10 மைல் சுற்றளவிற்கு காற்று அடர்தியாகவும், அதற்குமேல் 100 மைல் சுற்றளவிற்கு காற்று அடர்த்தி குறைவாகவும் அமந்துள்ளதாக கூறுகிறார்கள். ஆக்ஸிஜன் ஆகிய காற்று மையத்தை நோக்கி விரைந்து செல்லும் பொழுது ஹைட்ரஜன் வாயுவாக திரிந்து இவை ஆக்ஸிஜனும், ஹைட்ரஜனும் (H2O) இணைந்த நிலயை நீரின் தோற்றமாக உள்ளது. இந்த நீர் அதன் மையத்தை நோக்கி செல்லும் பொழுது நெருப்பாக ஆகிறது. இந்த நெருப்பு குழம்பு அதன் மையத்தை நோக்கி விரையும் பொழுது, இருக்கும் அணுக்கருக்குள் சிதைவு ஏற்பட மையத்திலிருந்து நெருப்பு குழம்பு பீறிட்டு வெளிவருகிறது. இது நீர் பரப்பிற்கு அப்பால் சென்று எரிமலையாக அமைகிறது. அங்குள்ள காற்று ஆக்ஸிஜன் அந்த எரிமலையை குளிரச் செய்து கற்பாறைகளாக, மலைகளாக அமைகிறது. இவ்வாறு நிலம் அமைகிறது. இதன் மொத்த தொகுப்பை பூமி என்று அழைக்கிறோம். விண் தோன்றுவதற்கு முன் வெற்றிடமே அமைந்திருக்கவேண்டும். அதற்கு அடுத்த நிலையில் விண் உருவாகி விண்ணிலிறிந்து காற்று உருவாகி, நெருப்பிலிருந்து நிலம் உருவாகியுள்ளது. இதன் அடுத்த நிலையே பரிணாம வளர்ச்சியின் உச்சகட்டமாகிய உயிரினங்கள் முதல் மனிதன் வரை தோன்றியுள்ளனர். இந்த இயக்கம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.
பிறப்பும் இறப்பும் பிறப்பிற்கு இறப்பிற்கும் இடைப்பட்ட நாட்களே ஒருவரது வாழ்க்கையின் வரலாறாக அமைகிறது. பிறப்பில் எவ்வித பாகுபாடுமில்லை. இறப்பிலும் எவ்வித பாகுபாடுமில்லை. பிறந்தவன் ஒருநாள் இறப்பது உறுதி. யாரும் இவ்வுலகில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாக சரித்திரமில்லை. இப்படி இருக்கையில் நம் பிறப்பிற்கும் இடையே பல்வேறு மாற்றங்கள் ஏன்? நம்முள் குணாதிசயங்கள் மாறுபடுவது ஏன்? ஒருவர் குற்றவாளியாக இருக்கிறார். ஒருவர் எதிர்பாராத விபத்தினால் மரணமடைக்கிறார். ஒருவர் பிறந்தது முதல் இறக்கும் வரை வாழ்க்கையில் சொல்லிலடங்கா துன்பத்தை அனுபவிக்கிறார். ஒருவர் வியாதிகளால் அவதியுறுகிறார். ஒருவர் இந்த சமுதாயத்திற்கு நன்மைகளை செய்து வருகிறார். ஒருவர் இச்சமுதாயதிற்கு தீமைகளை செய்து வருகிறார். ஒருவர் வசதி வாய்ப்புகளோடு வாழ்கின்றார். ஒருவர் புகழும் அந்தஸ்தையும் பெற்று வாழ்கிறார். ஒருவர் கையையோ காலையோ இழந்து காணப்படுகிறார். ஒருவர் அவர் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தடையாக, வீழ்ச்சியாக உள்ளது. முன்னேற முடியாமல் துடிக்கின்றனர். குழந்தையில்லா நிலை, குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் ஒற்றுமையில்லாத நிலை, திருமணம் தள்ளிக்கொண்டே செல்வதான நிலை, எதிர்காலம் பற்றிய பயம், தன்னுடைய மரணம் எப்படிப்பட்டதோ என்ற பயம், தொழிலில் நஷ்டத்தின் மேல் நஷ்டம் என அன்றாட வாழ்வில் காணும் துன்ப நிகழ்ச்சிகளோ ஏராளம் காரணம் என்ன? ஏன் இந்த மாறுபாடு ஒருவர் நன்மையை மட்டும் அடைகிறார். ஒருவர் தீமையை மட்டுமே அனுபவித்துவருகிறார். இதற்கு காரணம் யார்? நம் பெற்றோர்களா? நம்மை சுற்றியுள்ளவர்களா? நம் நண்பர்களா? இந்த சமுதாயமோ? இந்த நாடா? இந்த உலகமா? நம் முன்னோர்களா? அல்லது நம் அரசாங்கமா என்று நம்முள் கேட்டு பார்த்தால் பெற்றோர்கள் எப்பொழுதாவது தன் குழந்தைகள் கஷ்டப்பட வேண்டும் என்று எண்ணுவார்களா என்றால் இல்லை. அப்படியானால் பெற்றோர்கள் காரணமில்லை. முன்னோர்கள் என்றால் நம் கண்ணுக்கு தெரியாதவர்கள் இவர்களும் காரணமில்லை. இந்த சமுதாயமா என்றால் இந்த சமுதாயம்தான் நமக்கு படிக்கவும், உடைகளும், உணவும் அளித்து பாதுகாத்து வருகிறது. இந்த சமுதாயமும் காரணமில்லை. இவ்வாறு பார்த்தால் யாரும் காரணமில்லை. நம் பெயரே நம் இன்ப துன்பங்கள் அனைத்திற்கும் காரணமாக உள்ளது. பெயர்தானே என்ற அலட்சிய போக்கு இன்னும் நிலவுகிறது. . ஆகவே அவர்கள் தன் குழந்தைகளுக்கு பெயரை அறியாமையால் சூட்டுகிறார்கள் தவிர தெரிந்து சூட்டுவதில்லை. மனிதர்களுக்குள் மாறுபாடுகள் இருப்பதற்கு காரணம் நாம் பிறக்கக்கூடிய தேதி, மாதம், வீதி எண், கிழமைநேரம்பஞ்சபூதங்களில்எண்அடிப்படையில் பிறந்துள்ளோம் என்பதை பொருத்து மாறுபடுகிறது.பிறப்பவர்கள் யாரும் துன்பப்படுவதற்கு என்று பிறக்கவில்லை. பிறந்த தேதி நம் குணாதிசயங்களையும், வீதி எண் நாம் எவ்வளவு தூரம் பிரயாணம் செய்வோம் என்பதையும் நிர்ணயம் செய்கின்றது. ஜீவகாந்த பதிவு (BIO-MAGNETIC RECORD) ஜீவகாந்தம் என்பது பஞ்சபூதங்களால் ஆன உடல், ஸ்தூல உடல், சூக்குமஉடல், காரண உடல் அதாவது பரு உடல், உயிருடல், மன உடல் மனதில் ஆழ்மனம், அடிமனம், மேல்மனம் எனக்கூடிய மனதின் தன்மை ஆகிய அனைத்தும் கொண்ட மொத்த தொகுப்பு ஜீவ உடல் ஆகும். ஜீவகாந்தம் என்பது பஞ்சபூதங்களால் ஆன உடலில் மனதில் உள்ள ஆழ்மனம், அடிமனம், மேல்மனம், இதில் நமது பெயர் ஆழ்மனதில் நம்மையரியாமல் மனனமாகி கொண்டேயிருக்கும் இந்த மனனத்தின் விளைவால் ஆழ்மனதில் பதிவு ஆகிறது இந்த ஆழ்மன பதிவு குறிப்பிட்ட அலைவேகத்தில் இயங்கி உடல் முழுவதும் பதியும்படி செய்கிறது. இது எவ்வாறெனில் நீர் உள்ள பாத்திரத்தில் நடுவில் ஒரு கல் விழுந்தால் எவ்வாறு அந்த அலை பாத்திரம் முழுவதும் நிறைந்து இருக்குமோ அதுபோல் நம்பெயர் பரு உடல், உயிருடல், மனஉடல் என்ற மூன்று உடலிலும் பதிவாகிறது. இந்த ஆழ்மன பதிவு குறிப்பிட்ட அலைவேகத்தில் இயங்கி உடல் முழுவதும் பதியும்படி செய்கிறது. இந்த மூன்று உடலின் மொத்த பதிவையே ஜீவகாந்தப் பதிவு என்பதாகும். இந்த ஜீவகாந்தத்தில் பெயர் பதிவு மட்டுமே நிகழ்வதில்லை கண்ணால் காணக்கூடியதும், நம் எண்ணங்களும், செயல்பாடுகளும், காதால் கேட்பதும், நாம் பேசக்கூடியது என அனைத்தும் பதிவாகின்றது இந்த பதிவுகளை பற்றி பின்னொரு நூலில் விளக்கிக் கூறலாம். ஜீவகாந்த பதிவு ஜீவகாந்தம் என்பது பஞ்சபூதங்களால் ஆன உடல், ஸ்தூல உடல், சூக்குமஉடல், காரண உடல் அதாவது பரு உடல், உயிருடல், மன உடல் மனதில் ஆழ்மனம், அடிமனம், மேல்மனம் எனக்கூடிய மனதின் தன்மை ஆகிய அனைத்தும் கொண்ட மொத்த தொகுப்பு ஜீவ உடல் ஆகும். ஜீவகாந்தம் என்பது பஞ்சபூதங்களால் ஆன உடலில் மனதில் உள்ள ஆழ்மனம், அடிமனம், மேல்மனம், இதில் நமது பெயர் ஆழ்மனதில் நம்மையரியாமல் மனனமாகி கொண்டேயிருக்கும் இந்த மனனத்தின் விளைவால் ஆழ்மனதில் பதிவு ஆகிறது இந்த ஆழ்மன பதிவு குறிப்பிட்ட அலைவேகத்தில் இயங்கி உடல் முழுவதும் பதியும்படி செய்கிறது. இது எவ்வாறெனில் நீர் உள்ள பாத்திரத்தில் நடுவில் ஒரு கல் விழுந்தால் எவ்வாறு அந்த அலை பாத்திரம் முழுவதும் நிறைந்து இருக்குமோ அதுபோல் நம்பெயர் பரு உடல், உயிருடல், மனஉடல் என்ற மூன்று உடலிலும் பதிவாகிறது. இந்த ஆழ்மன பதிவு குறிப்பிட்ட அலைவேகத்தில் இயங்கி உடல் முழுவதும் பதியும்படி செய்கிறது. இந்த மூன்று உடலின் மொத்த பதிவையே ஜீவகாந்தப் பதிவு என்பதாகும். இந்த ஜீவகாந்தத்தில் பெயர் பதிவு மட்டுமே நிகழ்வதில்லை கண்ணால் காணக்கூடியதும், நம் எண்ணங்களும், செயல்பாடுகளும், காதால் கேட்பதும், நாம் பேசக்கூடியது என அனைத்தும் பதிவாகின்றது இந்த பதிவுகளை பற்றி பின்னொரு நூலில் விளக்கிக் கூறலாம். ஜீவ காந்தத்திற்கும் வான் காந்தத்திற்கும் உள்ள தொடர்பு ஜீவகாந்தமாகிய உடலுக்கும் வான்காந்தமாகிய பஞ்சபூதங்களுக்கும், நவக்கிரகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பஞ்சபூதங்களும், நவக்கிரகங்களுமே இவ்வுடலை இயக்கிக் கொண்டிருக்கின்றன என்பதை நம் ஞானிகள் முன்னரே அறிந்து விளக்கியுள்ளனர். அதாவது பஞ்சபூதங்களால் ஆன உடலை நவக்கிரகங்கள் இயக்குகின்றன. எந்த வகையில் எனில் சூரியன் நம் உடலில் உள்ள எலும்பையும், சந்திரன் நம் உடலில் உள்ள இரத்தத்தையும், செவ்வாய் நம் உடலில் உள்ள சிவப்பணுக்களையும், குரு கிரகம் நம் உடலில் உள்ள மூளையோடும், சனி கிரகம் நம் உடலில் உள்ள நரம்புகளோடும், சுக்கிர கிரகம் நம் உடலில் உள்ள விந்து குழம்போடும், புதன் கிரகம் நம் உடலில் உள்ள தோல்களோடும், ராகு, கேது சூரியனின் மையத்திலிருந்து வெளிப்படும் காந்த அலை பாதையானதால் அது சக்தி களம் முழுவதும் வியாபித்து சிவகளத்தில் கலக்கிறது. ராகுவும் கேதுவும் உடல் முழுவதையும் ஆதிக்கம் செலுத்துகிறது.
இதிலிருந்து பஞ்சபூதங்களால் ஆன உடலில் மூன்று உடல், மூன்று உடலில் மூன்று மனம் கொண்ட தொகுப்பை ஜீவகாந்தம் என்றும் இந்த உடலுக்கும் நவக்கிரகங்களுக்கும் உள்ள தொடர்பு, இவை அனைத்தும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் சங்கிலி தொடர்போல, அமைந்து ஒரு காந்த தன்மையை உருவாக்குகிறது. நம் எண்ணம், சொல், செயல்கள் யாவும் ஜீவகாந்தப் பதிவுகளாகி இந்த பதிவுகள் யாவும் வான் காந்தப் பதிவுகள் ஆகிறது. இந்த வான்காந்தப்பதிவு நம் தேவைக்கேற்ப எடுத்துக் கொடுக்கிறது. உதாரணமாக ஒரு மனிதரை சந்திக்கிறோம் அவரிடம் சுமார் அரைமணிநேரம்பேசி விட்டு திரும்புகிறோம் பிறகு இரண்டொரு நாள் கழித்து அவரைப்பற்றி நினைக்கிறோம். அவரிடம் பேசிய விசயத்தைப்பற்றி நினைக்கிறோம். அவருடைய உருவத்தை மனக்கண் முன் காண்கிறோம். இது எப்படி வருகிறது? என சிந்தித்தோமானல் நாம் பார்த்த அவர் உருவம் நம் கண் மூலம் காணும் பொழுது அவர் சுமார் 5 அடி இருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் சுமார் உருவம் நம் கண்ணில் ஒரு கொசு அளவில் பதிவாகி அந்த உருவம் நம் மூளையில் பதிவாகி பிறகு ஆழ் மனதில் பதிவாகிறது. அது உடல் முழுவதும் பதிவாகி வான்காந்தத்தில் பதிவாகிறது. நாம் அவரை நினைக்கும் பொழுது அவர் உருவம் வான்காந்தத்திலிறிந்து துரியம் (Cerebral Cortex) வழியாக மூளைக்கு வந்து மூளையிலிருந்து நம் கண்ணிற்கு பிரதிபலிக்கிறது. இவ்வாறு அவர் பேசிய செய்திகள் முதல் அனைத்தும் பதிவாகின்றன. அந்த பதிவுகள் ஜீவகாந்தப் பதிவு, வான்காந்தப்பதிவு என இருபகுதியாக உள்ளது. இதிலிருந்து ஜீவகாந்தத்தில் பதிவாகும் அனைத்தும் வான்காந்தத்திலும் பதிவாகும் என்பது தெரிய வருகிறது. பெயருக்கும், ஜீவகாந்தத்திற்கும், வான் காந்தத்திற்கும் உள்ள தொடர்பு ஜீவ உடலில் ஸ்தூல உடல், சூக்கும் உடல், காரண உடல் அதாவது பரு உடல், உயிர் உடல், மன உடல், என்பவையில் மன உடலில் உள்ள ஆழ் மனம், அடிமனம், மேல்மனம் என்பதில் ஆழ்மனதில் பெயர் பதிவடைகிறது. அதாவது என்னுடைய பெயர் "R.கிருஷ்ணன்" என்று நம்மையரியாமல் பதிவாகிறது. இந்த ஆழ்மனப் பதிவானது மூன்று உடலில் பதிவாகிறது. ஆழ்மனப் பதிவை நாம் எப்படி அறிவது எனில் நம்மை நமது பெயரை எங்காவது, யாராவது கூப்பிட்டால் உடனேயே நாம் திரும்பிபார்க்கிறோமே காரணம் ஆழ்மனதினுடைய பிரதிபலிப்பு. அதேபோல் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது கொசு ஒன்று நம்மை கடிக்கும் பட்சதில் நாம் விழிக்காமல் விழிப்புநிலையில் இருக்கும் ஆழ்மனம் நம் மூளையை இயக்கி நம்மையும் அறியாமல் கையினால் அடிக்கச் செய்கிறது. அதற்கும் காரணம் நம்முள்ளே இயங்கும் ஆழ்மனதினுடைய விளைவேயாகும். ஆழ்மனதிற்கு உறக்கம் என்பதே கிடயாது. இவ்வாறு ஆழ்மனதில் பதிவடையும் நம் பெயர் மூன்று உடலிலும் பதிவடைகிறது. இந்த ஜீவகாந்தப் பதிவுகள் யாவும் வான் காந்தத்திலும் பதிவாகிறது. ஜீவகாந்தத்திற்கும், வான்காந்தத்திற்கும் இடைப்பட்ட சங்கிலித் தொடர் போன்ற அமைப்பின் மூலம் ஏற்பட்ட காந்தத் தன்மையே பெயரின் காந்தத்தன்மையோடு சேரும்போது ஜீவகாந்தத்தில் சிலமாற்றங்கள் நிகழ்கிறது. அது பாதிப்புகளாகவும் ஊக்கப்படுத்துவதுமாகவும் அமைகிறது. இந்தப் பதிவுகளின் விளைவுகளே நமக்கு இன்பத்தையும், துன்பத்தையும் எதிர்பாராத விபத்துக்களையும் நோய்களையும் தரக்கூடியதாக அமைகிறது. ஜீவகாந்தம் பிறந்த தேதி, வீதி எண் (கூட்டு எண்) கிழமை, மாதம் பஞ்சபூதத்தில் எதன் அடிப்படையில் பிறந்தோம் என்பதை பொருத்து அமைகின்றது. ஒரு குறிப்பிட்ட நான்கு கிரகத்தின் தன்மையை தன்பால் ஈர்த்து வைத்துக் கொள்கிறது. இத்துடன் பெயராகிய மூன்று கிரகம் சேரும் பொழுது அந்த காந்தத்தன்மைக்கு ஒத்துவராமல் அமையும் பொழுது உடல், மனம், உயிர் தன் நிலையிலிருந்து மாறுபடுகிறது. அதாவது நோய்கள் ஏற்படுகிறது. மனம் அலைக்களிக்கப் படுகிறது, உயிர் தன் சுய பலத்தை இழக்கிறது. அதே போல் பெயராகிய மூன்று கிரகம் முன் உள்ள நான்கு கிரகத்தோடு ஒத்து போகும் பொது உடல், மனம், உயிர் மூன்றும் ஊக்குவிக்கப்படுகிறது. புகழும், அந்தஸ்த்தும் உயர்கிறது. பொருளாதாரத்தில் தடையில்லாத நிலையும் ஏற்பட்டு இன்பத்தை வாரி வழங்குகிறது. பஞ்சபூதங்களால் ஆன உடலில் எந்த தன்மையில் பிறக்கின்றாரோ அதற்கு ஒத்த தன்மையில் பெயர் அமையுமானால் நீண்ட ஆயுளை பெறுகின்றார். உதாரணமாக நிலத்தின் தன்மையால் பிறந்த ஒருவருக்கு நெருப்பின் தன்மையால் பெயர் அமையுமானால் ஆயுள் பலம் குறையும் என்பதால் எண் கணித முறைப்படி பெயர் வைப்பதில் பஞ்சபூதங்களும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே பெயருக்கும், ஜீவகாந்தத்திற்கும், வான் காந்தத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வான்காந்தம் நமது சூழ்நிலையை உருவாக்கக் கூடியதாக அமைந்துள்ளது. ஜீவகாந்தம் நம் உடலை இயக்கக் கூடியதாக அமைகிறது. இவ்விரண்டும் காந்தத் தன்மையோடு பெயர் இணைதும் நம் வாழ்க்கையை நிர்ணயம் செய்கிறது. ஜீவகாந்தத்தன்மையின் ஒரு பகுகுதியாக உள்ள பெயரினை நாம் மாற்றியோ, திருத்தியோ ஜீவகாந்தத் தன்மைக்கேற்ப பெயரை அமைத்து ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படித்திக் கொள்ளலாம். ஜீவகாந்தத் தன்மையின் ஒரு பகுதிகளாக உள்ள பெயரை திருத்தியோ மாற்றியோ அமைப்பதன் மூலம் வான் காந்தத்தன்மையும் மாறுபடுகிறது. இதனால் உடல், மனம், உயிர் மற்றும் சூழ்நிலைகளும் மாற்றம் பெறுகிறது.ஜீவகாந்தம் மற்றும் வான்காந்தத்தின் தன்மையை மாற்றம் செய்ய பெயர் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பெயரை கொண்டு மறைமுக ஆற்றலாக உள்ள கிரக ஆற்றலை வெளிக்கொணரச் செய்து இந்த உடலையும், மனதையும், உயிரையும் சூழ்நிலையையும் திருத்தி அமைக்க செய்யும். இந்த கலையே இது காணும் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கலையாகும்.“முள்ளை முள்ளாலேயே எடுக்க வேண்டும் என்பது பழமொழி. அதுபோல துன்பம் எதனால் ஏற்படுகிறது என்று ஆழ்ந்து ஆராய்ந்து சென்றோமானல் அதன் ஆதி நிலையாக உள்ள ஆணிவேரை நாம் காணமுடியும். அந்த ஆணிவேரை வேரோடு பிடுங்கி எறிவதால் நம் துன்பம் கலையப்படும். அந்த ஆணி வேராக உள்ள பெயரே இப்பொழுதுதான் கிடைத்துள்ளது. அதனை பிடுங்கி எறிய பல அறிஞர்களும், விஞ்ஞானிகளும், கற்றறிந்த பெரியோர்களும் முயற்சி செய்வார்களேயானால் இந்த சமுதாயத்திற்கு அவர்கள் செய்யும் மிகப் பெரிய தொண்டு ஆகும். இந்த சமுதாய மக்களை மூன்று பிரிவாக பெரியோர்கள் பிரித்துள்ளனர். சிறுவர்கள், வாலிபர்கள், வயதானவர்கள். இந்த நிலையில் சமுதாயத்திற்கு சேவை செய்யும் முக்கிய பங்கு யாரிடம் உள்ளது எனில் சிறுவர்கள் அறிவின் வளர்ச்சியை பெறுபவர்கள். வயதானவர்கள்நோய்களால் துன்பப்படுபவர்கள். இவர்களில் வாலிபப்பருவத்தினர் மட்டுமே சமுதாயத்திற்கு நன்மைகள் செய்ய முடியும். வாலிபப் பருவத்தினர் பெயர் பற்றிய அறிவினை வளர்த்துக் கொண்டால், இந்த சமுதாயம் சொல்லிலடங்கா நன்மையை அடையும். மக்களின் துன்பத்தை போக்க பல ஆயிரம் ஆண்டுகளாக ஞானிகளும், முனிவர்களும் அறிஞர்களும், விஞ்ஞானிகளும் முயன்று தன்னிறைவு அடையாத நிலையில் அவரவர்கள் சென்ற பாதையைச் சுட்டிக்காட்டி அவர்களால் முயன்ற வரை முயற்சித்து சென்றார்கள். இன்று கம்ப்யூட்டர் காலத்தில் அறிவியல் வளர்ச்சிகள் பிரமிக்கத்தக்க அளவில் வளர்ந்திருந்தாலும் மக்களின் துன்பத்தை சீர்படுத்துவதாக உள்ளதா எனில் அதுவும் இவ்வுலகை துன்பத்தில் ஆழ்த்தக் கூடிய அளவிலேயே வளர்ந்துள்ளது. இன்று நமக்கு கிடைத்திருக்கும் இந்த எண்கணிதம் உயிரினங்களில் உச்சக்கட்ட அறிவாகிய ஆறாவது அறிவின் துணைக்கொண்டு நம் துன்பங்களை நாமே களைய கிடைத்திருக்கும் அற்புத வாய்ப்பு ஆகும். இதை தங்கப்புதையலாக கருதி அனைவரும் பயன்பெறுவதே சிறப்பாகும்.

No comments:

Post a Comment