Thursday, 10 September 2015

வியாதிகளுக்கு பெயரே காரணம்


நம் உடலில் உள்ள மையங்கள் நம் ஒவ்வொரு உடலிலும் 8 மையங்கள் உள்ளன. இந்த 8 மையங்கள் 8 சக்கரங்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த 8 சக்கரங்களும் உடலில் உள்ள உறுப்புகளை தனக்குள் பிரித்துக் கொண்டு சீராக வைத்துக் கொள்வதற்கான அமைப்பாக செயல்படுகிறது. மையங்களில் உள்ள சக்கரங்கள் முறையே. 1. துரியம் (Cerebral cortex) 2. மனோன்மணீயம் (Pineal gland) 3. ஆக்கினை (Convernous plexy) 4. விசுக்தி (Pharyngeal plexy) 5. அனாகதம் (Cardiac plexy) 6. மணிப்பூரகம் (Solar plexy) 7. சுவாதிஷ்டானம் (Hypogaestric plexy) 8. மூலாதாரம் (Coccygeal plexy என்பனவையாகும். இவற்றை பண்டைய கால ஞானிகளும், முனிவர்களும் கண்டு உணர்ந்து இந்த சக்கரம் சீராக இயங்க பயிற்சியும் செய்து மற்றவர்களுக்கு கற்றுத் தரவும் செய்துள்ளனர். இதை இன்றைய விஞ்ஞானிகள் ஆராய்ந்து உண்மையென கூறி இதற்கு நாளமில்லா சுரப்பிகள் (Ductless glands) என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த எட்டு மையத்தை மையமாக வைத்தே எழுத்துக்களை எட்டு பிரிவுகளாக பிரித்துள்ளனர். இந்த எட்டு சக்கரங்களில் எந்த சக்கரம் பாதிப்புக்குள்ளானாலும், சீரான இயக்கம் இல்லையென்றாலும், அந்த சக்கரத்தோடு தொடர்புடைய உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. இந்த சக்கரங்களை மீண்டும் இயங்கச் செய்ய அந்த காலத்தில் கையினால் தன் உயிர் ஆற்றலை மற்றவருக்கு செலுத்தி அச்சக்கரம் இயங்க உதவி செய்தனர். இதற்கு பாஸஸ் (தொட்டுணர்த்தும்) முறை என்று பெயர். இதன் மூலம் சிறிய வியாதிகள் முதல் பெரிய வியாதிகள் வரை தொடர்ந்து தொட்டு உணர்த்து முறையில் (Passes) செயல்பட்டு குணப்படுத்தினர். ஆனால் மீண்டும் குறிப்பிட்ட காலம் வரை சீராக இருந்து மீண்டும் வந்தடைகின்றது. இன்றைய மருத்துவத்துறையில் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் பெரும் நோய்களை குணப்படுத்த இயலவில்லை. அவர்கள் தற்காலிகமாக விடுதலையளிக்கின்றனரே தவிர நிரந்தரமாக நோய் குணமாக்க இயலவில்லை காரணம் எதனால்? இந்த நோய் ஏற்படுகிறது என்ற மூல காரணத்தை துருவி ஆராய்தலில் அவர்கள் விஞ்ஞான அடிப்படையில் பார்த்தனரே அன்றி மெய்ஞ்ஞான அடிப்படையில் பார்க்கவில்லை. நம் ஞானிகளும், முனிவர்களும் நோயின் மூலத்தை கண்டு அதனை சரிசெய்தும் வாழ்ந்தனர். அதனால் தான் இந்து ஆலயங்களில் இருக்கும் தெய்வங்கள் அந்தந்த நிலையில் உள்ளார் என கூறி அதற்கென சக்கரங்களையும் மந்திரங்களையும் நிறுவி வழிப்பட செய்தனர். உதாரணமாக திருச்சியில் உள்ள திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்பாள் சுவாதிஷ்டான நிலையில் உள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் உள் அமைந்துள்ள மூலஸ்தானத்தில் உள்ள அம்பாளின் உருவம் அமைப்பில் தொப்புளுக்கு அருகில் சுவாதிஷ்டான சக்கரம் இயங்கும் இடத்தில் நாகம் தலைதூக்கி நிற்பது போன்று அமைத்து இங்கு தீபாராதனையும் காண்பிப்பர். இதுபோல் ஆலயங்கள் நமக்கு பல உண்மையான மறைமுகமான கருத்துக்களை வெளிப்படுத்தவே அமைந்துள்ளது. அதே போல் சிவனின் பழைய படங்களை பார்த்தால் இந்த எட்டு மையங்களையும் சிவனின் உருவத்தில் அமைக்கப்பட்டிருப்பதை காணலாம். அதாவது ஒவ்வொரு நிலையிலும் ஒரு பாம்பு உடலை சுற்றி வளைத்து கொண்டு இருந்து படமெடுத்தாற்போன்று காட்சி அளிக்கும், கழுத்தில் ஒரு பாம்பு அதாவது விசுக்தியை நினைவு கூறுவதாகவும், மார்பில் ஒரு பாம்பு அனாகதத்தை நினைவுப்படுத்துவதாகவும், சுவாதிஷ்டானம், மூலாதாரம் எனவும் நெற்றியில் இரு புருவங்களுக்கு இடையே உள்ள மூன்றாவது கண்ணாக அமைந்துள்ள சக்கரம் ஆக்கினையையும், தலையில் ஜடாமுடியோடு முடியில் ஒரு பாம்பு அமையப்பெற்று துரியத்தை நினைவுப்படுத்துவதாகவும் எட்டு வகையான சக்கரங்களை அமைத்துள்ளனர், இந்த எட்டு வகையான சக்கரங்கள் அமைக்கப்பட்ட சிவனின் உருவத்தை மனதில் நிறுத்தி விழிப்பட்டால், நம் எட்டு சக்கரமும் நம்மையறியாமல் இயக்கம் ஊக்குவிக்கப்படும் என்பதற்காக அமைத்துள்ளனர். அதாவது நாம் எதை ஒன்றை நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிவிடுகிறோம் என்பதை நினைவில் கொண்டு பார்த்தால் இந்துக்கள் தெய்வ வழிபாட்டில் ஏதோ ஒரு கருத்தை நிலை நிறுத்தி சென்றுள்ளனர். அன்றைய காலத்தில் விளங்கவைக்க போதிய வசதி வாய்ப்புகள் கிடைக்காததால், காலத்தால் அறிந்து கொள்ளட்டும் என கூறி சென்றுள்ளனர். அதே போல் விநாயகரும் தன் வயிற்றில் தொப்புள் இருக்கும் இடத்திற்கருகில் பாம்பு சுற்றி உள்ள படங்களை கண்டிருக்கின்றோம். அது மூலாதாரம் நிலையில் அமர்ந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாறு எட்டு மையங்களாக உள்ள எட்டு சக்கரங்களும் அன்றைய காலம் முதல் நடைமுறை வாழ்க்கையோடு ஒன்றி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. விஞ்ஞானத்தையும், மெய்ஞானத்தையும் இணைத்து பார்க்கும் பொழுது இந்த எட்டு சக்கரங்களுக்கும் நம் பெயர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பது தெரிய வருகிறது. இந்த எட்டு சக்கரங்களும் ஒன்பது கிரகங்களின் ஆதிக்கத்துக்குட்பட்டுள்ளது. ஆங்கில எழுத்துக்கள் 26-ஐ நாம் உச்சரிக்கும் விதத்தில் எட்டுமையங்களாகவும் எட்டுசக்கரங்களாகவும் பிரித்துள்ளனர். உதாரணமாக V- என்ற எழுத்தை உச்சரிக்கும் போது நம்முன் குறிப்பிட்ட "அலை" விகிதாச்சாரத்தில் செல்கிறது. இந்த அலையானது நம் உடலில் உள்ள Cardiac Plexy என்று அழைக்கக்கூடிய அனாகதச் சக்கரம் வரை செல்கின்றது. இவ்வாறு 26-எழுத்துக்களையும் 8 பிரிவாக பிரித்துள்ளனர். அண்ட வெளியில் உள்ள அனைத்துக்கும் நம் உடலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பஞ்சபூதங்களுக்கும் இந்த சக்கரங்களுக்கும் தொடர்பு உண்டு. சர்வ வல்லமை படைத்த இந்த சக்கரங்கள் இந்த உடல், மனம், உயிர், மூன்றும் இயங்க இயங்க ஒழுங்கை ஏற்படுத்தும் ஒரு களமாக அமைந்துள்ளது. அறிவு இந்த எல்லாவற்றையும் ஆளும் திறன் படைத்தது. அறிவு அதன் தன்மையால் உண்மையை உணரக்கூடிய நிலைக்கு இச்சக்கரங்களை அறிந்து செயற்படும் நிலைக்கு இழுத்துச் செல்கிறது என்றால் அறிவின் ஆட்சித் தரத்தை வியக்காமல் இருக்கமுடியாது. அறிவே தெய்வம், அறிவையே தெய்வமாக வழிப்படுங்கள் என்று தாயுமானவர் கூறியுள்ளார். இந்த எட்டு மையங்கள் பற்றிய அறிவை ஞானிகளும் சித்தர்களும் அறிந்து அதை இயக்கி பயன்பெற்றார்கள். நோயின்றி, துன்பமின்றி வாழ்ந்தார்கள். ஆனால், இன்றைய காலத்தில் இந்த எட்டு மையங்கள் பற்றிய அறிவு கிட்டாமையலும் அதை பற்றிய முக்கியத்துவம் தெரியாமையாலும் அந்த எட்டு மையங்கள் சீர்தூக்கி இயக்க முடியாமல் பலப்பல துன்பங்களுக்கும் ஆளாகி அவதியுறுகிறார்கள். தற்பொழுது கிடைத்திருக்கும் இந்த எண் கணிதம் என்ற காந்தத் தத்துவத்தின் மூலம் இந்த எட்டு மையங்களில் எந்த மையம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை பெயரைக் கொண்டு கண்டுபிடித்து அதே பெயரைக் கொண்டு இயக்கச் செய்து நோய்களை கட்டுப்படுத்தி, நிரந்தரமாக குணமடையச் செய்வதற்கே நேம்யோபதி (Nameopathy) சிகிச்சை என்று பெயர். இச்சிகிச்சை எந்த நாட்டினருக்கும் பயன்படும். இந்த உலக முழுமைக்கும் நேமியோபதி (Nameopathy) சிகிச்சை பொருந்தும். இந்த சிகிச்சைக்கு பிறந்ததேதி, பெயர் மட்டுமே போதுமானது. பிறந்த தேதியிலிருந்து பிறந்த தேதி, மாதம், விதிஎண், கிழமை, பஞ்சபூதம் என்ற ஐந்தின் அடிப்படியில் பெயரை சீர்திருத்தி அழைத்தோமானால் தினசரி எழுதுவது மூலமே நோய்கள் குணமடையும். இத்தகைய சிகிச்சை நேமியோபதி (Nameopathy) சிகிச்சை எனப்படும். ஏற்கனவே இருக்கக்கூடிய பெயரை கொண்டு எந்த சக்கரம் சீர்கேடடைந்து உள்ளது என்பது தெரியவரும். அவ்வாறு சீர்கேடடைந்த சக்கரத்தை மீண்டும் சீர் செய்ய பிறந்த தேதி, மாதம், விதிஎண், கிழமை, பஞ்சபூதம் ஆகியவற்றை கொண்டு ஏற்கனவே உள்ள பெயரை சீர்திருத்திக் கூட்டியோ, குறைத்தோ, மாற்றியோ தினசரி எழுதுவதன் மூலமே நாள்பட்ட நோயும் மிகப் பெரிய அதாவது திடீர் மரணத்தை ஏற்படுத்த கூடிய இருதய பலஹீனம் இரத்த அழுத்தம், சர்க்கரை ஆஸ்துமா போன்ற நோய்களையும் குணப்படுத்த முடியும். நோயைப் பற்றிய விரிவான நூல் பிறகு வெளிவரும்.
பெயர் நம்மை எப்படி இயக்குகிறது? இந்த உடல் அணுக்களால் கட்டப்பட்ட ஒரு ஆலயம். இந்த ஆலயத்தில் மூலஸ்தானமாக அமைந்திருப்பது கருமையம் ஆகும். அணுக்களால் கட்டப்பட்ட இந்த உடல் என்பதை பாரதியின் ஒரு பாடலைக் கொண்டு நினைவு கூறலாம். "காக்கை, குருவி, எங்கள் சாதி! காடு, மலைகள், எங்கள் கூட்டம்" என்ற வரியை கூர்ந்து கவனித்தால் பாரதி என்ற கவிஞன் மிக பெரிய காந்த தத்துவத்தை விளக்கும் ஞானியாக இருந்துள்ளார் என்பதை நாம் அறிய முடியும். காக்கை, குருவிகள் எங்கள் சாதி காடு, மலைகள், எங்கள் கூட்டம் என்ற சொல் காக்கை குருவி பசித்தால் உண்ணும் எங்களை போன்ற ஒரு சாதி என்றும் காடு மலைகள் எங்களை போன்று அணுக்களின் கூட்டம் என்றும் கூறுகின்றார். அணுக்களால் கட்டப்பட்ட இந்த உடலுக்குள் இயங்கும் அற்புதங்கள் ஏராளம் ஏராளம். அண்டவெளியில் அமைந்துள்ள அனைத்தையும் இந்த உடலுக்குள் காணமுடியும். மறைபொருளாக இருக்கும் இந்த பிரபஞ்சம் முழுவதும் நம் உடலுக்குள் தொடர்பு வைத்துக் கொண்டு உள்ளது. இதனால் தான் நம் அறிஞர்கள் கடவுள் = கட+வுள் உள்ளே கடந்து பார் என்று கூறினார்கள். உள்ளே கடந்து பார்த்தால், அண்டவெளியில் நமக்கு தெரியும் இந்த உலகத்தையே நம் முன் காணமுடியும் என்பதை மகாபாரதத்தில் கிருஷ்ணர் தன் வாயைப்பிளந்து உலகை காண்பித்தார். அவ்வாறு கிருஷ்ணர் செய்தது நாம் அவர் வாயினுள் பார்க்க அல்ல. நம் முன் பாருங்கள் இந்த உலகத்தை அறியலாம் எனக் கூறினார். இந்த சக்திகளம் முழுவதும் என்ன உள்ளது எனப்பார்த்தால் நவக்கிரகங்கள் மிதந்து கொண்டிருக்கின்றன. இந்த பூமியில் பஞ்சபூதங்கள் நிறைந்துள்ளன. அதற்கப்பால் சுத்தவெளி அமைந்துள்ளது. பஞ்சபூதங்களின் பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு அழுத்தம் ஒலி, ஒளி, சுவை, மணம், உயிரினங்களில் மனம் என தோன்றின. உயிரினங்களின் பரிமாண வளர்ச்சியில் மனம் என்ற ஒன்றை உணரும் மனிதன் ஆறாவது அறிவை கொண்டு தோன்றினான். இந்த அடிப்படையில் உயிரினம் தவிர பஞ்சபூதம் நவக்கிரகங்கள் அனைத்தும் நம் உடலோடு தொடர்பு வைத்துக் கொண்டுள்ளன. நவக்கிரகங்களும், பஞ்சபூதங்களும் உடலுக்குள் ஒரு பகுதியாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. உடல் என்பது நம் கண்ணுக்குத் தெரிந்த பரு உடல் எனக் கருதக் கூடாது. பரு உடலோடு கூடிய உயிருடல், மன உடல், மின் உடல் என நான்கு உடல்கள் உள்ளன. இவற்றுள் மறைபொருளாக உள்ளது அறிவு, பரு உடல், உயிர் உடல், மன உடல், மின்னுடல், என நான்கு உடல்களில் மன உடலாகியதில் ஆழ்மனம், அடிமனம், மேல்மனம் என்ற மூன்று நிலைகள் உண்டு. இதில் ஆழ்மனதில் மிக அதிகமாக பதிவாவது நம் பெயரெயாகும். இந்த ஆழ்மனம் நம்முடைய பெயரை நம்மையறியாமல் திரும்ப திரும்ப கூறி கொண்டிருக்கின்றன. இந்த பதிவின் விளைவாக 3 உடலிலும் பரவி இந்த உடலுக்கு அப்பாலும் பரவி செல்கிறது. இந்த உடல்பதிவை தான் அதாவது ஜீவ உடலில் ஏற்படும் பதிவை ஜீவகாந்தப்பதிவு என்றும் இவ்வாறு ஜீவகாந்தத்தில் பதிந்த நம் பெயர் வான் காந்தத்திலும் பதிவடையும். இவ்வாறு வான்காந்தத்தில் பதிவடையும் பொழுது தான் அது நம்மை சுற்றி சூழ்நிலைகளை உருவாக்குகின்றன. ஆழ் மனப்பதிவை நாம் எப்படி அறியமுடியும் என்றால் நம் வேறு செயல்கள் செய்து கொண்டிருக்கும் பொழுதும் சரி சாலையில் நடந்து கொண்டிருக்கும் பொழுதும் சரி "சேகர்" என நமது பெயரை யாராவது கூப்பிடுவாரேயானால் உடனே திரும்பிப் பார்க்கின்றோமே ஏன்? இது தான் ஆழ்மனதினுடைய தன்மை. ஆழ்மனதிற்கு மிகுந்த வலிமையும், வல்லமையும் உண்டு முன் கூறியபடி ஒருவர் தூக்கத்திலேயே சட்டென கொசுவை அடிக்கிறார், அடிக்கத் தூண்டியது எது என்றால் அது தான் ஆழ்மனதினுடைய விளைவு. நாம் உறங்கினாலும் ஆழ்மனம் எப்போதும் விழிப்புணர்வுடன் உள்ளது என்பதை அறிகிறோம். இத்தகைய தன்மை கொண்ட ஆழ்மனம் நம்மையறியாமல் பெயரைப் பதிவு செய்து கொண்டேயுள்ளது. இவ்வாறு ஆழ்மனதில் நம் பெயர் பதிவடைந்து மூன்று உடலிலும் பரவி ஜீவகாந்தப்பதிவாகி பிறகு வான் காந்தப்பதிவாகி நம் சூழ்நிலையை அமைக்கின்றது. ஒருவருடைய பிறந்த தேதி, குணாதிசயத்தையும் விதி எண் நாம் எவ்வளவு தூரம் பிரயாணம் செய்ய முடியும் என்பதையும், அந்த பிரயாணத்தையும் நாம் எப்படி செய்கிறோம் என்பதையும் நம் பெயர் நிர்ணயம் செய்கிறது. நம் பிறந்த தேதி முன் கூறியபடி கர்ம பலனின் வாயிலாக நிர்ணயம் ஆகிறது. விதி எண் என்பது பிறந்த தேதி, மாதம், வருடம் அனைத்தையும் கூட்டி வரும் எண், ஒரு கிரகத்தின் ஆதிக்கத்திற்குட்பட்டு. இந்த விதி எண் ஒருவர் எவ்வளவு தூரம் பிரயாணம் செய்ய முடியும் என்பதை குறிக்கும். அதாவது புகழை எடுத்து கொள்வோம் ஒருவர் தெரு அளவில் புகழ் அடைய முடியும் என்பதையும், ஊர் அளவில் புகழ் அடைய முடியும் என்பதையும், மாவட்ட அளவில், மாநில அளவில், இந்த நாடு அளவில் என அவருக்கு விதிக்கப்பட்ட விதியை நிர்ணயம் செய்ய கூடியதாக இவையாவும் பஞ்சபூதங்களையும் நவக்கிரகங்களையும் அடிப்படையாக கொண்டு சொல்லபடுகின்றன. பஞ்சபூதங்களும், நவக்கிரகங்களும் நம்மை இயக்குகின்றன. எல்லா கிரகங்களும் இயக்கிக் கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட கிரகங்கள் தனது ஆட்சிக்குட்படுத்துகின்றது. அவ்வாறு ஆட்சிக்குட்படுத்தும் பொழுது நம் செயல்பாடுகள், உடல் நோய்கள் என ஏற்படுகின்றன. அனைத்து கிரகங்களும் நம் முன் இயங்கிக் கொண்டிருந்தாலும் பிறக்கும் நாள் அன்று 9 கிரகங்களில் 4 கிரகங்கள் முழு ஆதிக்கம் செலுத்துகின்றது. இந்த 4 கிரகங்களும் நம் வாழ்வோடு ஒன்றி பிணைக்கப்பட்டு இருக்கும். இந்த கிரகங்களின் சேர்க்கையினால் ஏற்படக்கூடிய விளைவுகள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். ஒருவர் 22-6-1998 அன்று திங்கள்கிழமை பிறக்கிறார் என்றால் அவருக்கு ராகு, சூரியன், புதன், சந்திரன் என்ற 4 கிரகங்களின் முழு ஆதிக்கத்திற்குட்படுகிறார். அதாவது பிறந்த தேதி 22 என்பது ராகு கிரகத்தின் ஆதிக்கத்தையும், ஜூன் மாதம் 22 என்பதால் புதன் ஆதிக்கத்தையும், விதி எண் 1 என்பதால் சூரியனின் ஆதிக்கத்தையும், திங்கட்கிழமை என்பதால் சந்திரனின் ஆதிக்கத்தையும் பெறுகின்றார். அதைப்போல் பஞ்சபூதங்களின் அடிப்படையில் உப்பு நீரின் தன்மையில் பிறந்துள்ளார். "இவ்வாறு நான்கு கிரகத்தின் ஆதிக்கத்திலும் பஞ்சபூதங்களின் நீரின் ஆதிக்கதிலும் பிறந்துள்ளார்". இதனால் ஏற்படக்கூடிய பலன்கள் தொடர்ந்து சம்பவித்துக் கொண்டே இருக்கும். இதை நிலையானது (Constant) எனலாம். இம்மாதிரியான நான்கு கிரகங்களின் சேர்க்கையிலும், பஞ்சபூத சேர்க்கையிலும் எந்த மனிதனும் கஷ்டப்படவேண்டும் என்பதோ அகால மரணம் அதாவது எதிர்பாராத விபத்திலோ, திடீர் மரணம் ஏற்படவேண்டும் என்றோ கிடயாது. இந்த நான்கு கிரக ஆதிக்கமும் பஞ்சபூத சேர்க்கையும் நமக்கு நன்மைகளை வாரி வழங்குகிறதே தவிர தீமைகள் ஏற்பட வழிவகுக்கவில்லை. இதிலிருந்து, பிறக்கும் எந்தன் மனிதனும் துன்பப்படுவதற்காக பிறக்கவில்லை என்பது தெரியவருகிறது. இவ்வாறு நான்கு கிரகங்களின் சேர்க்கை சரியில்லாது இருக்கும் போது பெயரின் உதவியைக் கொண்டு சரிசெய்துக் கொள்ளமுடியும். எந்த சூழ்நிலையிலும் கிரகங்களின் சேர்க்கை சரியில்லாத போதும் சுகமான வாழ்க்கையாவது தருகிறதே ஒழிய துன்பப்படுத்துவது இல்லை. துன்பத்திற்கு பெரிதும் காரணமாக இருப்பது பெயரே ஆகும். அதாவது பெயரில் 3 கிரகம் அமைந்துள்ளது. எப்படி எனில் இனிசியலில் ஒரு கிரகம் பெயரில் ஒரு கிரகம், இனிசியலோடு பெயரும் சேர்ந்து ஒரு கிரகம். பெயரே ஆட்சி செலுத்துகிறது. இந்த பெயரில் உள்ள 3 கிரகமும் ஏற்கனவே பிறந்த தேதியில் உள்ள 4 கிரகங்களோடு ஒத்தும் உதவியாகயிருக்கும்படி அமைத்து பெயரில் பஞ்சபூதத்தின் அடிப்படையிலும் பெயர் சரியாக அமைத்தால் திட்டவட்டமாக சிறப்பான வாழ்வு உண்டு. எதிர்பாராத விபத்தினால் மரணமில்லை. குற்றவாளி என்கிற அமைப்பில்லை. துன்பம், கஷ்டம். நஷ்டம் என்பதில்லை. பஞ்சபூதங்களால் பதிப்புகள் கிடையாது. மனதில் அமைதியும், ஆனந்தமும் நிரந்தரமாக நிலைக்கும். செல்வ செழிப்பு கிடைக்கும். நினைத்தது நடக்கும். செயல்பாடுகள் யாவும் உலக நன்மைக்கு பயன்படும். எதிர்பாராத விபத்தினால் மரணமில்லாமல், குற்றவாளிகள் அற்ற துன்பமற்ற செல்வ செழிப்போடு மக்களின் மத்தியில் அமையும், ஆனந்தமும் பெற்று ஒரு உலகம் அமையுமானால் எப்படி இருக்கும் என சிந்தியுங்கள். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. அந்த நாளை எண் கணிதத்தால் பெறமுடியும். நம்மையும் இந்த உலகத்தையும் பெயரே இயக்கிக் கொண்டிருக்கின்றது. ஆம், இதற்கு பல உதாரணம் கூறலாம். கோயமுத்தூர் என்று உபயோகித்து கொண்டிருந்தவரை ஊர் சிறப்பாக இருந்தது. கோவை(Covai) என்ற பெயர் உபயோகப்படுத்தியதிலிருந்து அழிந்து கொண்டிருக்கிறது.
C O V A I 3+7+6+1+1 = 18 18 என்ற எண் சூரியனும், சனியும் சேர்ந்து ஆதிக்கமாக கொண்டதினால் தீக்கிறையாக வேண்டும் என்பதே எண் கணிதத்தில் விதிக்கப்பட்ட விதி. சூரியனை பிரதானமாக வைத்து கேது சேர்ந்தாலும், சனி சேர்ந்தாலும், சுக்கிரன் சேர்ந்தாலும் எதிர்பாராத விபத்தினால் மரணம் ஏற்படுகிறது. மற்றொரு உதாரணம் கூறலாம். S R I L A N K A 3+2+1+3+1+5+2+1 = 18 எண் கொண்ட ஸ்ரீலங்காவும், ராமாயண காலத்திலிருந்து எரிந்து அழிந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கான சூழ்நிலையை பெயரே அதாவது பெயரில் உள்ள கிரகமே ஏற்படுத்துகிறது. மேலும் சமீபத்தில் கோவையில் எரிந்து சாம்பலான ஷோபா என்ற கடைக்கும் பெயர் 18 எண் அமைந்ததே காரணம். S H O B A 3+5+7+2+1 = 18 என்ற எண்ணாகும். இதிலிருந்து பெயரில் உள்ள எண்ணுக்கு எத்தகைய வலிமையுள்ளது என்பதை அறியலாம். இவை ஊர்களுக்கும், நாடுகளுக்கும் பொருந்த கூடியவை. இன்னும் பல நாடுகளையும் கூறலாம். இதை போல் மனிதர்களுக்கும் இனிசியலிலோ, பெயரிலோ மொத்த எண்ணிலோ, சூரியனை பிரதானமாக வைத்து சுக்கிரனோ, கேதுவோ, சனியோ, வருமானால் எதிர்பாராத விபத்தினால் மரணம் ஏற்படுகிறது. அதாவது இனிசியலோ, பெயரிலோ மொத்த எண்ணிலோ 16,17,18எண் வருமானால் எதிர்பாராத விபத்தினால் மரணம் என்பதை திட்டவட்டமாக கூறிவிடலாம். இதற்கு பல உதாரணங்களை கூறலாம். உதாரணமாக, முன்னாள் ராணுவத்துறை அமைச்சர் N.V.N சோமு அவர்களுக்கு 5+6+5 = 16இன்சியலில் 16 எண் அமைந்தால் எதிர்பாராத விபத்தினால் மரணம் அடைந்தார். இந்த எண்ணுடைய குணம் யாதெனில் இந்த எண் வரும் பெயரை உடையவருக்கு ஆரம்பத்தில் கெடுத்துக் கொண்டேயிருக்கும். இது எப்போது உச்சநிலையை அடைகிறதோ அப்போது உயர்ந்த நிலைக்கு இழுத்துச் சென்று திடீரென எதிர்பாராத விபத்தினால் மரணத்தை ஏற்படுத்தும். அந்த மரணமும் உடல் சிதறக்கூடிய வகையில் அமையும். மேலும் உதாரணம், பிரிட்டிஸ் இளவரசி C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 எண் அமைந்துள்ளதால் அதனுடைய விளைவையடைந்தார். இதுபோல எண்ணில் அடங்கா உதாரணங்களை கூறிக் கொண்டேயிருக்கலாம். இந்த எண்ணில் உள்ள குணம் கவிழ்விக்க கூடிய குணம் ஆகும். அதே போல் J A P A N 1+1+8+1+5 = 16 எண் அமைந்துள்ளதால் நாடு எவ்வளவு தான் வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருந்தாலும் அது வீழ்ச்சியை அடைந்துக் கொண்டுதான் இருக்கும். இதற்கடுத்தாற்போல் 17 என்ற எண்ணும் சூரியனை பிரதானமாக வைத்து கேதுவின் ஆக்கத்திற்குட்பட்டது. அதாவது இந்த எண்ணினுடைய தன்மை யாதெனில் ஒருவரை கார் வாங்கும் அளவிற்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி அதே காரிலேயே எதிர்பாராத விபத்தினை ஏற்படுத்தக் கூடியது. அதாவது மோட்டார் வாகனத்தில் விபத்து என்பது தான் விதிக்கப்பட்ட விதி. இவை அன்றாடம் ஏராளமான நபர்களை பார்க்க கூடிய அளவில் தான் உள்ளது. மேலும் இனிசியலோ, பெயரிலோ மொத்த எண்ணிலோ 8 எண் வருமானால் பஞ்சபூதங்களால் பாதிக்கப்படலாம். எதிர்பாராத விபத்தினால் மரணம் ஏற்படுவதற்கு காரணம் உள்ளது. அதாவது இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ சனியினுடைய ஆதிக்கத்தில் அமையுமானால் எதிர்பாராத விபத்து ஏற்படுகிறது. உதாரணமாக, நம் பாரதப் பிரதமர்களில் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, ராஜிவ் காந்தியின் தம்பி சஞ்சய் காந்தியும் எதிர்பாராத விபத்தினால் மரணம் அடைந்தனர். இதற்கு காரணம் இவர்களது தந்தையின் மற்றும் கணவரது பெயர் ஃபெர்ரோஸ்காந்தி என்பதால் இனிசியல் "F" அதாவது 8-ன் தன்மையில் சனியினுடைய ஆதிக்கத்தில் அமைந்தமையால் எதிர்பாராத விபத்தினால் மரணம் விளையக்காரணமாய் இருந்தது. இதைபோல ஏராளமான உதாரணங்களை தரலாம். இத்தகைய சனியினுடய ஆதிக்கத்தினால் பெரியசாமி, பொன்னுசாமி இவர்களை போன்றவர்களின் பிள்ளைகள் பெரிதும் பதிப்புகுள்ளாகிறார்கள். இந்த எண்ணினுடைய குணம் யாதெனில் வாழ்க்கையின் முன்னேற்றத்தை, சுகத்தை, சந்தோஷத்தை, எந்த அளவில் கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு கொடுத்து முடிவில் பஞ்சபூதங்களலோ, எதிர்பாராத விபத்தினாலோ மரணத்தை ஏற்படுத்துகிறது. அடுத்ததாக சந்திரனை எடுத்து கொள்வோம். சந்திரன் பிரதானமாக வைத்து சந்திரனே இணைந்தாலும் சுக்கிரன் இணைந்தாலும், செவ்வாய் இணைந்தாலும் கெடுதலான விதியையே அடைகிறது. அதாவது 22, 26, 29 என்பது போன்ற பெயர்களிலோ, இனிசியலிலோ மொத்த எண்ணிலோ வருமானால் எதிர்பாராத விபத்தினால் மரணம் ஏற்படுகிறது. அதாவது சந்திரனோடு சந்திரன் இணையும் பொழுது சுயநலவாதிகளால் சூழப்படக் கூடிய நிலையும், சுயநலவாதிகளால் பயன்படுத்தப்பட்டு எதிர்பாராத விபத்தினால் மரணம் ஏற்படுகிறது. அதே போல் சுக்ரன் இணையும் பொழுது எதிரிகளால் சூழப்பட்டு எதிரியால் மரணம் என்பது. இதற்கு விதிக்கப்பட்ட விதியாகும். அதாவது எதிரிகள் என்பது ஆட்களாக இருக்கலாம். வாகனமாகவோ அல்லது விஷ மருந்தாகவோ கூட இருக்கலாம். ஆக மொத்தம் திடீரென எதிர்பாராதபடியே விபத்தாகவே வாழ்க்கை முடிகிறது. அதே போல் செவ்வாய் சேரும் பொழுதும் மிக கெடுதலான பலன்களே நடக்கிறது. அதாவது கோர்ட், கேஸ் என வழக்குகளால் அலைக்கழிக்கப்படுவதாக அமைகிறது. மற்றவர்கள் முன் இவர்கள் குற்றவாளிகளாக நிற்கும் நிலை ஏற்படும். இதற்கடுத்தாற்போல குருவை பிரதானமாக வைத்து புதன் (35) சேர்க்கையும் சிறப்பானதல்ல. இவை வீண் தொல்லைகளையும், வம்பு வழக்குகளையும் உண்டு பண்ணும். தவறான வழிக்கு இழுத்துச் செல்லும்படி மனதை தூண்டும். அதையும் மீறி இவரால் சேர்க்கப்பட்ட செல்வம் இவர்கள் முன் அழிந்து, இவரும் எதிர்பாராத விபத்தினால் மரணம் அடையவேண்டும் என்பதே விதி. அதே போல குருவை பிரதானமாக வைத்து சனி சேர்க்கையும் (38) பெரிய ஆட்களுடைய தொடர்புகளை ஏற்படுத்தி மனத்தில் துக்கத்தை ஏற்படுத்தும். உயர்பதவி, புகழ், அரசாங்க ஆதரவுகளை ஏற்படுத்தி எதிர்பாராத விபத்தினால் மரணம் ஏற்படுகிறது. இதேபோல ராகுவின் இரட்டை சேர்க்கையும் (44) சட்டவிரோதமான காரியம் தீயவழிகளில் பணம் சேர்க்க முயல்வர். பிற்காலத்தில் அனைத்தையும் பறிகொடுப்பர். ஒரு காலையோ, கையையோ இழக்க வேண்டிவரும். இதே நிலை நீடித்து முடிவில் விபத்தினால் மரணத்தை ஏற்படுத்துகிறது. இதேபோல ராகுவோடு செவ்வாய் சேர்க்கை (49) செல்வத்தை வேகமாக கொடுத்து ஒரு கலையோ, கையையே இழக்க செய்து எதிர்பாராத விபத்தினால் மரணத்தை ஏற்படுத்துகிறது. இதேபோல 8, 16, 17, 18, 22, 26, 29, 35, 38, 44, 48, 49, 53 போன்ற எண்கள் பெயரிலோ, இனிசியலிலோ, மொத்த எண்ணிலோ வருமானால் எண் கணித முறைப்படி பெயரை சரிபார்த்து திருத்தியோ, மாற்றியோ அமைத்துக் கொள்வதன் மூலம் தீய விளைவுகளில் இருந்து தப்பித்து கொள்ளலாம். இதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. எப்படி நம் பெயரை கண்டறிவது என்றால், A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8
என்ற எண்களை நினைவில் கொண்டு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் தனித்தனியாக பிரித்து எழுதி அதற்குரிய மதிப்பெண்களை போட்டு இனிசியல் தனியாகவும், பெயரை தனியாகவும், மொத்த எண்களை தனியாகவும் கூட்டி பார்க்க முன் சொன்ன 8, 16, 17, 18, 22, 26, 29, 35, 38, 44, 48, 49, 53 போன்ற எண்கள் வருகின்றதா என பார்க்கவேண்டும். S. R. THANGARASU என பெயரை கையெழுத்திடுகிறார் என வைத்து கொள்வோம். S. R. THANGARASU 3. 2. 45153312136 5. 31 = 36 இதில் இனிசியல் எண் 5 ஆகியும், பெயர் எண் 31எண் ஆகவும், மொத்த எண் 36 எண்ணாகவும் அமைந்துள்ளது. அதேபோல P. GANESAN 8. 315531 8. 23 = 31 இதில் இனிசியல் எண் 8, பெயர் எண் 23 ஆகவும், மொத்த எண் 31 எண்ணாகவும் அமைந்துள்ளது. இதில் இனிசியலில் 8 எண் இருப்பது நல்லதல்ல. R. SANKAR 2. 315212 2. 14 = 16 இதில் இனிசியல் எண் 2, ஆகவும், பெயர் எண் 14 ஆகவும், மொத்த எண் 16 ஆகவும் அமந்துள்ளது. இதில் மொத்த எண் 16 ஆக உள்ளது நல்லதல்ல. மேலும், V.N.V SUNDHAR 6.5.6 3654512 17. 26 = 43 இதில் இனிசியல் எண் 17 எண்ணும், பெயரில் 26 எண்ணும், மொத்தத்தில் 43 எண்ணும் அமைந்துள்ளது. பெயரும் இனிசியலில் உள்ள எண்களும் நல்லதல்ல. சரியான முறையில்சரியானபாதைக்கு அழைத்துச் செல்வோமானால் இந்த உலகம் சரியான பாதையில் அதாவதுவெற்றிப் பாதையில் செல்லும். தனி மனிதனுடைய முன்னேற்றமே அவன்குடும்பத்தினுடைய முன்னேற்றம், அந்த குடும்பத்தினுடைய முன்னேற்றமே அந்தஊரினுடைய முன்னேற்றம், அந்த மாநிலத்தின் முன்னேற்றம், அந்த மாநிலத்தினுடையமுன்னேற்றமே அந்த நாட்டின் முன்னேற்றம், அந்த நாட்டின் முன்னேற்றமே இந்தஉலகத்தினுடைய முன்னேற்றம். ஆகவே முதலில் நம் தேவை தனி மனிதனுடைய முன்னேற்றம் இந்த தனி மனிதனுடைய முன்னேற்றம் பொருளாதாரத்தாலோ, குடும்பச் சூழ்நிலையாலோ எதிர்பாராமல் தடைபடுமேயானால்அது இந்த உலக முன்னேற்றத்தை பாதிக்கிறது. ஆகவே தனி மனிதன் பொருளாதாரத்தில் முன்னேற்றமும், மனதில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் பெற்று வாழ தனி மனிதனுடைய பெயரை சரிபார்த்து அமைத்து கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment