

பெயர் சரியில்லாமையால் ஏற்படும் துன்பங்கள்
பெயர் என்ற காந்த ஆற்றலை துல்லியமாக அளவிட்டு பார்த்து நம் எதிர்காலத்தை அறிந்து அதை திருத்திக் கொள்ளும் ஒரு ஆற்றலாக செயல்படுவது எண் கணிதமாகும். இத்தகைய எண் கணிதம் அண்டத்தை விலக்கி, அணுவை துளைத்து ஆதியை உணரும் கலையாக செயல்படுகிறது. நம் துன்பங்களை கலையும் ஒரு மருந்தாக செயல்படுகிறது என்றால் வியப்பில்லை.
பல்வேறு ஞானிகளும், முனிவர்களும், அறிஞர்களும், நம் துன்பங்களை போக்க பல்வேறு வழிகளில் முயன்று கண்டுபிடித்து நமக்கு விட்டு தந்துள்ள அற்புதமான கலை எண் கணிதக் கலை. ஆகவேதான் திருவள்ளுவர் எண் கணிதக் கலையை நன்றாக உணர்ந்து, அறிந்து இதன் சிறப்பை இவ்வுலகில் வாழும் உயிர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" என்று கூறியுள்ளார்.
அதாவது இவ்வுலகில் வாழும் உயிர்களுக்கு, மக்களுக்கு பிறந்த தேதியின் எண்ணும் எழுத்தும் ஆகிய தலையெழுத்தாக உள்ள பெயர் இந்த இரண்டும் சரியாக இருந்தால் இரண்டு கண்கள் எப்படி ஒளி பொருந்தியுள்ளதோ அதேபோல் வாழ்க்கையும் ஒளிபொருந்தி இருக்கும் என்பதை கூறியுள்ளார்.
திருவள்ளுவர் மட்டும் கூறவில்லை பல ஞானிகளும் கூறியுள்ளனர். ஒளவை மூதாட்டியும் எண்ணும் எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்று கூறியுள்ளார். இவர்கள் இத்தகைய வரியை ஏனோதானோ என்று கூறவில்லை. ஆழ்ந்து சிந்தித்து பெயருக்கும் எண்ணுக்கும் உள்ள தொடர்புகளை அறிந்து அதன் ஆற்றலை உணர்ந்து தான் பாடலாக எழுதியுள்ளனர். பெயரே நம் துன்பதிற்கும், இன்பதிற்கும் காரணமாக உள்ளது. எத்தகைய துன்பங்களுக்கும் காரணமாக உள்ளது எனில் குடும்பத்தில்,
- கணவன், மனைவிக்குள் ஒற்றுமையின்மை.
- குழந்தைகளின் எதிர்காலம் தனது எதிர்காலம் பற்றிய பயம்.
- நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருத்தல்.
- ஜான் ஏற முழம் இறங்குதல் போன்ற நிலை.
- குழந்தைபேறு இல்லாத நிலை.
- செய்கின்ற தொழிலில் முன்னேற்றமின்மை.
- நஷ்டம், கடன் தொல்லையால் அவதி.
- மற்றவர்களால் ஏமாற்றப்படுத்தல்.
- எதிரிகளால் அமைதியின்மை, பயம்.
- வேலை செய்யுமிடத்தில் மேலதிகாரிகளால் வஞ்சிக்கப்படுவது.
- பதவி உயர்வு தடைபடுதல்.
- வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தும் தடைபடுதல்.
- திருமணப் பொருத்தம் அமையாமல் தள்ளிக் கொண்டே போவது.
நோய்களால் பதிப்பு, இரத்த அழுத்தம், சர்க்கரை, மூத்திரக் காய்கள், கண்ணில் நீர் வடிதல், கீழ்வதம், தோல் சம்பந்தமான வியாதிகள், வயிற்று வலி, ஆஸ்துமா, வாயு, பிடிப்பு, குடல் சம்பந்தமான பசியின்மை, தூக்கம் கெடுவது, நரம்பு பலஹீனம், பாரீச வாயு, மூறை பலஹீனம், சித்த பிரம்மை, காக்கை வலிப்பு, இருதய பலஹீனம், மலச்சிக்கல், குடலபுண், மூலரோகம் என இருபது வகையான வியாதிகளுக்கும் பெயரே காரணமாக உள்ளது.
மேலே கண்ட துன்பங்கள் பெயரை கொண்டே வருகிறது. இத்தகைய துன்பங்களை சரிசெய்ய பெயரின் உதவியின்றி குணம் செய்ய முடியாது. தற்காலிகமாக ஏனைய மருத்துவத்தில் தடைபடுத்த முடியுமேயன்றி நிரந்தரமாக குணப்படுத்த இயலாது. பெயரினால் ஏற்பட்ட துன்பத்தைப் பெயரினாலே தான் சரி செய்ய முடியும்.
நோய்களும் சரி, கஷ்டம், நஷ்டம், போன்ற துன்பங்களாக இருந்தாலும் குடும்பத்தில் ஒற்றுமையின்மை, எல்லாவற்றிற்கும் பெயரே காரணமாக உள்ளது. இத்தகைய வல்லமை படைத்த பெயரை பிறந்த தேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தினை அடிப்படையாக வைத்து பழைய பெயரை திருத்தியோ, மாற்றியோ அமைத்துக் கொண்டால் துன்பங்கள் விலகிவிடும். எண் கணிதத்தால் பயனடைந்தோர்பல்லாயிரம் பேர். எண் கணிதம் பார்க்காமல் அழிபவர்கள் பலகோடி பேர்.

விதியை நிர்ணயம் செய்வது விதி
விதியை மதியால் வெல்லலாம் என்பது பழமொழி. நாம் அன்றாட வாழ்வில் அதிகமாக பயன்படுத்தும் சொல் அர்த்தம் என்னவென்றால் தன்னால் இயலாத காரியத்தையும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று நம்மை இயக்குகிறது என்பதையும் உள்ளுணர்வாய் கொண்டு விதி, பாசம், இவைகளுக்கு கட்டுண்டு குறுகிய வட்டத்துக்குள் சுழலும் அமைப்பையும் விதி என்றே கூறுகிறோம். என்னுடைய தலைவிதி இவரிடம் ஏமாறவேண்டும் என்று கூறுவதிலும் தலைவிதி என்று கூறுகிறோம்.
இதிலிருந்து என்ன தெரிகிறது எனில், நாம் செய்யும் தவறுகளை விதி என்று கூறி தப்பித்துக் கொள்வதற்கு பயன்படுத்துகிறோம். அல்லது நம் மனதை சாந்தப்படுத்திக் கொள்வதற்காக விதியை பயன்படுத்துகிறோம். ஆனால் அடிக்கடி நம் தலைவிதி, தலையெழுத்து, நெற்றியில் என்ன எழுதி இருக்கிறதோ அதுதான் நடக்கும். உனக்கென்று விதிக்கப்பட்ட விதி இதுதான் என்றெல்லாம் விதியை பட்டியலிட்டு உபயோகிக்கிறோம்.
இந்த விதியை எங்கோ ஒருவன் இருந்து கொண்டு நம் தலையில் எழுதி வைத்ததாகவும், பல கதைகளாக எண்ணி கூறிக் கொள்கிறோம். ஆனால் அன்றைய ஞானிகளும் முனிவர்களும் விதி என்று கூறியது நம் பெயரைதான். பெயரின் காந்த ஆற்றலை அறிவின் துணை கொண்டு கண்டு பிடித்து அந்த அறிவைக் கொண்டே பிறந்த தேதி, விதி எண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என இவற்றை அடிப்படையாக கொண்டு பெயரை நிர்ணயம் செய்து நம் எண்ணம் போல் வாழ வழிவகுதுக் கொடுக்கிறது.
இந்த ஆற்றலை கூர்ந்து நோக்கினால் விதியை விட மதியே வலிமைப்பெற்றது. அந்த மதியால் விதியை நிர்ணயம் செய்ய முடியும் என்பது புலனாகிறது. வலிமை படைத்த ஒன்று அதற்குட்பட்ட செயல்பாடுகளை அறிந்து தன் இச்சைப்படி நடத்தும் குணம் வலிமைக்கு உண்டல்லவா. அதுபோலதான் விதியை மதியே நிர்ணயம் செய்கிறது. இதனால் விதிக்கு வலிமை இல்லை என கருதக்கூடாது. விதியை மாற்றியமைக்கவேண்டும் என்று விதி இருந்தால் ஒழிய மதி வேலை செய்யாது. அறிவை கொண்டு விதியை நிர்ணயம் செய்கிறோம். அதையும் செய்வதற்கு விதியிருந்தால் தான் நடக்கிறது. மதியை கொண்டு விதியின் வலிமையை அறிந்து, அதன் இயக்கத்தை துல்லியமாக கணக்கிட்டு, காந்தத் தன்மையின் விளைவுகளை அறிந்து சரி செய்யும் ஒரு அற்புதக் கலையாக எண்கணிதக் கலை அமைந்துள்ளது.
இத்தகைய எண்கணிதக் கலை வாழ்வியல் நிகழ்ச்சிகளை மிக துல்லியமாக கூர்ந்து நோக்கி ஆய்வின் ஒரு துளியை அடைந்துள்ளோம். இந்த ஒரு துளி, பெருவெள்ளமாக பெருக்கெடுத்து, ஒரு ஆறாக, ஒரு கடலாக ஆகும் நிலை ஏற்படும் பொழுது இந்த நில உலகில் துன்பமில்லை, நோயிமில்லை, பாவிகளில்லை என்ற நிலை வந்துவிடும். அப்பொழுது இவ்வுலகில் வாழும் மக்கள் எல்லாம் இன்பத்தை மட்டுமே சுவைத்து கொண்டிருப்பர். இப்பூமி சுவர்க்க பூமியாக மாறிவிடும் காலம் வெகு தொலைவில் இல்லை.
கர்மப்பலனை ஒருபகுதியகவும், பெயரை ஒரு பகுதியாகவும் கொண்டு இந்த உடல், மனம், உயிர் ஆகிய மூன்றும் சரீரங்களுக்கும், பஞ்சபூதங்களுக்கும் நவகிரகங்களுக்கும் உட்பட்டு இயங்கி கொண்டிருக்கின்றன. ஆன்றோர்களும், பெரியோர்களும், சித்தர்களும், முனிவர்களும், ஞானிகளும், பல்லாயிரம் முறை சொல்லி வந்த ஒரு சொல் எந்த செயலுக்கும் ஒரு விளைவு உண்டு, செயலுக்கேற்ற விளைவுகள் உண்டு அது எந்த செயலையும் குறிக்கும் என்றால் நாம் நம் பெயரை எழுதுகிறோமே அதற்கும் விளைவு உண்டுதானே? அதை ஆராய்ந்ததன் விளைவே நம் துன்பங்களை போக்கக்கூடியதாக அமைந்துள்ளது. இவ்வாறு கூறி நல்லதையே செய்யுங்கள். நல்லதையே பாருங்கள். நல்லதையே நினையுங்கள். நல்லதே நடக்கும் எனக் கூறிவந்தனர்.
இந்த மாதிரி நல்லதையே நினைக்க பேச, கேட்க, பார்க்க நல்ல எண் அதாவது பெயர் அமைந்தால் தான் நடக்கும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவன் மனம், உடல், உயிர் அனைத்தும் தீயவழிகளுக்கு இழுத்து செல்கிறது. நாம் ஒரு திருடனை பிடித்து டேய்! ஏன்டா இப்படி திருட்டு வேலை செய்கிறாய்? எதாவது தொழில் செய்து பிழைக்க வேண்டியது தானே என்று கேட்டல் அவன் என்ன கூறுகிறான். எனக்கு தொழில் திருட்டு தொழில் நான் எதற்காக திருடுகிறேன். சாப்பிடுவதற்காக தான். ஆகவே தவறு ஒன்றுமில்லை என்று கூறுகிறான். இதில் இருந்து என்ன தெரிகிறது இந்த சமுதாயம் கெடுதலான தொழில் என வைத்துள்ளது. அவனைப் பொருத்தவரை நியாயம் எனக் கூறுகிறான். காரணம் அவனுடைய மனம் தீய வழிக்குச் சென்று தீயவழியே அவனை பொருத்தவரை நல்லவழியாக மாறிவிட்டது. அந்த அளவிற்கு அவனது மனம் அவனை ஆதிக்கம் செலுத்துகிறது.
அந்த மனதை ஆதிக்கம் செலுத்துவது பெயர். ஆகவே திருத்தவேண்டியது அவனை அல்ல அவனது பெயரைத்தான். இதில் இருந்து நமக்கு என்ன தெரிகிறது? பெயருக்கு வல்லமை அதிகமா? மனதிற்கு வல்லமை அதிகமா? என்றால் மனம் ஒரு குறிப்பிட்ட இலக்கிற்கு சென்று கொண்டிருந்தாலும் பெயர் அதன் இலக்கிற்கு சிறிது சிறிதாக மாற்றி இழுத்துச் செல்கிறது. காரணம் பெயரின் காந்தத் தன்மை சூழ்நிலையை அமைக்கும் வல்லமை படைத்தமையால் பெயருக்கு மனதைவிட வல்லமை அதிகம். அதற்காக மனம் வல்லமையற்றது என கருதக்கூடாது. செயல்பாடு என்பது மனதை பொறுத்த ஒரு இயக்கம். ஆனால் இந்த மனதையும் பெயரையும் சீர் செய்து அதாவது நடுவராக இருந்து அவ்வப்போது ஆளுமை செய்வது அறிவாகும். அவ்வப்போது அறிவு தன் ஆளுமைக்குட்படுத்தும்.
அப்பொழுது அறிவின் செயல் உயர்த்தியதை உணர்ந்து பிடித்துக் கொண்டு செயல்பட்டோமனால் இங்கு மனதை முழு ஆதிக்கத்திலிருந்தும், பெயரிடமிருந்தும், பிரிக்கலாம். முழு ஆதிக்கத்திலிருந்து பிரிக்க முடியுமே தவிர முழுமையாக பிரிக்க இயலாது. அவ்வாறு முழுமையாக பிரிக்க வேண்டுமெனில் நல்ல ஒரு பெயரை திருத்தியோ, மாற்றியோ அமைத்துக் கொண்டால் மட்டும் போதாது. தினசரி எழுதவும், என்னுடைய பெயர் இதுதான் என்ற சிந்தனையோடு செயல்பட்டால், விதியை மதியால் வெல்லலாம். இதுவும் ஒருவகையான தவத்தை போன்றதுதான் இதற்கு பெயர் தவம் என கூறலாம். தவம் செய்வதே நம் எண்ணங்கள், செயல்கள், பேச்சுக்கள். ஒரு நிலையில் இருக்கவேண்டும் என்பதாகும்.
அதாவது நாம் எதை நினைக்கிறோமோ அதை பேசவேண்டும். எதை பேசினோமோ, அதை செய்யவேண்டும். இது போல் எண்ணம், செயல், சொல் மூன்றும் ஒரே கோட்டில் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் தவம் செய்கிறோம்.
அத்தகைய வாழ்கை தான் சிறப்பான வாழ்க்கை. ஆனால் இன்று எல்லோரும் அப்படியிருக்கிறோமா? என்றால் கிடையாது. நாம் சாப்பிடும் பொழுதுதான் வியாபாரத்தைப் பற்றியும், பணி செய்யும் மேலதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்தும் பேசிக் கொண்டிருக்கிறோம். அதேபோல் படிக்கும் போது தான் எந்த தியேட்டரில் எந்த சினிமா ஒடிகிறது. அதற்கு எப்பொழுது போகலாம் என்பது போன்ற சிந்தனைகள். இவ்வாறு நாம் நன்றாக யோசித்து பார்த்தோமானால் எண்ணம், சொல், செயல் என்ற மூன்றையும் முறையாக ஒரு விசயத்திலாவது கடைப்பிடித்திருக்கிறோமா என்றால் கிடையாது.
நம் மனம் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது. அத்தகைய மனதை நம் பெயர் எழுதும்போது முழுக்கவனமும் பெயரிலேயே வைத்து எழுதுவது என்பது ஒரு வகைத்தவமேயாகும். நமக்கு முறையாக பிறந்த தேதி, வீதி எண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என ஐந்தையும் அடிப்படையாக கொண்டு பெயர் வைத்துக் கொண்டோமேயனால் நம் பெயரே நமக்கு குருவாக இருந்து செயல்பட ஆரம்பிக்கிறது. இத்தகைய பெயரை குறிப்பிட்ட முறை எழுதிக் கொண்டு வந்தால் ஏற்கெனவே உள்ள பெயரில் எதிர்பாராத விபத்தினால் மரணம் என்றோ, ஏற்றத்தாழ்வுகள் பொருளாதாரத்தில் ஏற்படும் என்றோ இருந்தால் இதுபோன்று பல்வேறு பிரச்சைனைகளும் தீர்ந்து விதியை மதியால் வென்று வெற்றி வாகை சூடலாம். வாழ்வில் என்றும் அமைதியும், ஆனந்தமும் நிலைக்கும்.
தலையெழுத்தை எழுதியது பிரம்மாவா?
இந்துக்கள் பிரம்மா என்றும், முஸ்லீம்கள் அல்லா என்றும், கிறிஸ்துவர்கள் பரிசுத்தமானவர் என்றும் அவரவர்கள் தங்களது விருப்பமான தெய்வத்தைக் கூறிக்கொள்கின்றனர்.

இதை நம் சிந்தனைக்கு எடுதுக் கொள்வோம். இறைவன் என்பது யார் என்று புலப்படும். இங்கு முதலில் பிரம்மா என்று கூறும் இந்துவின் கடவுளை எடுத்துக் கொள்வோம். பிரம்மா என்பது ஒன்றுமில்லை. ஆகவே ஒன்றுமில்லாதவன் ஆகிறான். அடுத்ததாக முஸ்லீம்கள் கும்பிடும் அல்லாவை எடுத்து கொள்வோம். அல்லா என்றால் அல்லாதவன் என்பதுதான் பொருள். அதாவது ஒன்றுமில்லாதவன் என்பது தான் பொருள்.
கிருஸ்துவர்கள் வணங்கும் பரிசுத்தமானவர் என்பதும், ஒன்றுமில்லாதவர் என்று தான் அர்தம். இதிலிருந்து என்ன தெரிகிறது. நாம் கூறுவதில் வேறுபாடு பிரம்மா, அல்லா, பரிசுத்தமானவன் என்பது, ஆனால் மூன்றிற்கும் பொருள் ஒன்றுதான். அந்த ஒன்றுமில்லாதவனுக்கு இன்பமோ துன்பமோ கிடயாது. விருப்பமோ, வெறுப்போ கிடையது. பிறப்பு, இறப்பு கிடயாது. இவ்வாறு எதுவும் இல்லாத ஒருவனுடைய படைப்பில் மட்டும் விருப்பு, வெறுப்பு, இன்பம், துன்பம் என பாகுபாடோடு படைப்பான என்றால் முடியாது. அவனுடைய படைப்பில் எந்தவிதமான மாற்றமும் கிடையது. அவன் ஒன்றுமில்லாதவன், என்றும் நிரந்தரமானவன் என்பது சுத்தவெளி என்ற ஒன்றயே குறிக்கும். இந்திலிருந்து நம் தலையெழுத்தை எழுதியது பிரம்மாவும் இல்லை. அல்லாவும் இல்லை. பரிசுத்தமானவனும் இல்லை. வேறு யாரும் எழுதவில்லை. நம் தலையெழுத்தை நாமே தான் எழுதிக்கொள்கிறோம்.
நமக்கு. எந்த பெற்றோர்களும் தன் குழந்தைகள் துன்ப்படவேண்டும் என்று எண்ணுவதில்லை. எண்ணி பெயர் வைப்பதில்லை. அவர்களும், தன் அறியாமையால் செய்யும் தவறேயாகும். இப்பொழுது பிறக்கும் குழந்தைகளுக்கு எண்கணித முறைபடிதான் பெயர் சூட்டுகிறார்கள். இதற்கு முன் பெயரின் முக்கியத்துவம் தெரியாமையினால் தவறுகள் செய்தனர். அது மட்டுமின்றி எண் கணித நிபுணர்களும் மிகவும் குறைவு.
அத்தகையவர்களை பார்ப்பதே கடினம். அதையும் மீறி பார்த்தாலும் அவர்கள் நிர்ணயிக்கும் தொகையோ ஏராளம். சாதாரண மக்கள் இதற்கு பயந்து கொண்டு போகாமல் தன்னுடைய வாழ்க்கையை தானே கெடுத்துக் கொள்கின்றனர். பெற்றோர்கள் தன் அறியாமையினால் பெயரை அமைத்திருந்தாலும், இன்று நாம், நமது பெயரை திருத்தி அமைத்துக் கொண்டு ஒளிமயமான எதிர்காலத்தை பெற்று நம் நாட்டையும், இந்த உலகையும், முன்னேற்ற பாதையில் இழுத்துச் செல்லக்கூடிய முக்கிய பொறுப்பு நமக்கு உள்ளது. நம் ஒவ்வொருவருக்கும் ஆசைகளும், குறிக்கோள்களும் உண்டு. அதாவது நாம் இப்படி இருக்கவேண்டும். அப்படி இருக்கவேண்டும் என்பது போன்ற எண்ணங்கள், எதிர்பார்புகள் என்பதே கிடையாது என்று கூறுவர். வெளிப்படையாக கூற மறுத்தாலும், உள்ளுக்குள் எதிர்பார்புகள் என்பது இருக்கும்.
அந்த எதிர்பார்ப்புகள் நடைபெறாத பொழுது அல்லது நடைபெறும் சூழ்நிலை இல்லாத பொழுது மிகவும் வேதனை அடைகிறார்கள். அதற்காக எதிர்பார்ப்பு இல்லாமலும் இருக்கமுடியாது. எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கை சப்பென்று ஆகிவிடும். உங்களுடைய எண்ணத்தில் ஆசிரியராக வேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அத்தகைய எண்ணம் வருவதற்கான காரணம் அவருக்கு விதிக்கப்பட்ட விதி ஆசிரியராக வேண்டும் என்பது தான், அது கிடைக்காமல் போகும்போது அந்த ஏக்கம் எப்பொழுதும் அவனது உள்ளத்தில் இருந்து கொண்டேதான் இருக்கும்.
அவர் அந்த ஆசிரியராக முடியாமைக்கு காரணம் அவருடைய பெயரே ஆகும். இங்கு விதி எது என்று சந்தேகம் வரலாம். ஏற்கனவே கூறியபடி நாம் பிறக்கும் நாளில் நான்கு கிரகங்கள் ஆட்சி செலுத்துகிறது. அந்த ஆட்சி இறக்கும் வரை நிலையானது. அந்த நான்கு கிரகங்களும், பஞ்சபூதமும் சேர்ந்து ஒரு காந்த ஆற்றலை ஏற்படுதுகிறது.
அத்தகைய ஆற்றலிருந்து வெளிப்படும் விரிவலையானது ஒரு குறிப்பிட்ட இலக்கை நிர்ணயம் செய்யும். அந்த இலக்கை நோக்கி போகவும் முயற்சி செய்யும். அந்த இலக்கை அடைய பெயராகிய மூன்று கிரகமும், பஞ்சபூதமும் ஏற்படுத்தும் காந்த அலையிலிருந்து வெளிப்படும் விரிவலை ஏற்கனவே நிலையாக உள்ள விரிவலையோடு சார்ந்து இருக்குமானால் கடிவாலமிட்ட குதிரைபோல் அந்த இலக்கையே மிக குதூகலமாக சென்றடையும். அவ்வாறு இரு விரிவலைகளும் ஒத்து வராத பொழுது பெயராகிய விரிவலை தனித்தன்மையோடு வெளிப்பட்டு அதன் பாதைக்கு இழுத்துச் செல்லும், அப்பொழுதுதான் அவன் தன் மனதிற்கு இசைவில்லாமல் பெயர் செல்லும் இலக்கிலே ஏனோ தானோ என்று செல்கிறான்.
இதற்கு உதாரணம் கூறலாம். டாக்டருக்கு ஒருவர் படிக்கிறார் என்றால், அவர் மேல்நிலை தேர்வு எழுதி தேர்ச்சியும் பெற்று, மருத்துவ கல்லூரியில் குறிப்பிட்ட அனுமதி தேர்வுகளையெல்லாம் வென்று இடம் கிடைத்து ஐந்து வருட படிப்பையும் முடித்து டாக்டர் பட்டத்தை பெறுகிறார். இவரை போலவே அனைவரும் படித்து கடினமாக உழைத்துதான் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் அந்த நூறு பெரும் பிரசித்தி பெற்ற டாக்டர்களாக இருக்கிறார்களா என்றால் இல்லை. நான்கு (அ) ஐந்து பேரோதான் பிரபல்யம் அடைகின்றனர். என்ன காரணம், படித்த படிப்பில் குறைபாடா? சொல்லிக் கொடுத்த ஆசிரியரின் குறைபாடா? என்றால் கிடையாது. அவனுடைய பெயராகிய மூன்று கிரகங்கள் ஏற்கனவே நிலையாக உள்ள நான்கு கிரகங்களோடு சார்ந்து அமைந்ததாலேயே அந்த ஐந்து பேர் பிரபல்யம் அடைந்தனர் மீதமுள்ள தொன்னூற்று ஐந்து பேர்களும் கடமையே என்று தொழில் செய்வார்கள்.
ஆகவே பெயர் நம் வாழ்க்கைக்கு எத்தகைய சூழ்நிலைகளை உருவாக்குகின்றது என்பதை அறியலாம். இதிலிருந்து நாம் ஒவ்வொருவருக்கும் நிலையாக உள்ள காந்த ஆற்றலிலிருந்து வெளிப்படும் விரிவலையின் காரணமாக இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற சிந்தனை உண்டு அத்தகைய சிந்தனை செயல்பாட்டிற்கு வர பெயராகிய மூன்று கிரகமும், பஞ்சபூதமும் ஒத்து வந்தால் வாழ்க்கைக்கு குதூகலமாக, ஆனந்தமாக விரும்பிய வழியில் சென்று கொண்டிருக்கலாம். அத்தகைய விரும்பிய தொழில்தான் பல்வேறு சாதனைகளையும், பிரம்மிக்கதக்க வளர்ச்சியினையும் அடைய முடியும். அதற்கு பெயரை சரியாக அமைத்து கொண்டால்தான் நடக்கும். இதிலிருந்து தலையெழுத்தை எழுதியது பிரம்மாவா, அல்லாவா, பரிசுத்தமானவரா....
நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்களோ அது உங்களது பெயரின் மூலமாகவே கிடைக்கும். நீங்கள் மிகப்பெரிய தொழில் அதிபராக வேண்டுமா, ஆராய்ச்சியாளராக ஆக வேண்டுமா, மில், கம்பெனி இவைகளுக்கு அதிபதியாக வேண்டுமா, அரசியலில் புகழும், அந்தஸ்தும் பெற வேண்டுமா, பிரமிக்கத்தக்க பேச்சாற்றல் வேண்டுமா, உங்களுடைய வார்த்தைக்கு மற்றவர்கள் அடங்கி போக வேண்டுமா, பொன், பொருள், பூமி சேர்க்க வேண்டுமா, சுயமுயற்சியும், தன்னம்பிக்கை வேண்டுமா, நீங்கள் வாங்கும் சொத்து பல தலைமுறைக்கு பயன்பெறவேண்டுமா, மக்களின் அமோக ஆதரவு, மக்களால் சூழப்படும் நிலை வேண்டுமா, ஊர் ஊரக சுற்ற ஆசையா, வெளிநாட்டு பயணம் வேண்டுமா, சிறந்த நகைச்சுவையாளராக வேண்டுமா, என்ன வேண்டும் உங்களுக்கு. உங்களது தேவையை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் உங்களுடைய விதியை நீங்களே நிர்ணயம் செய்யக்கூடிய நிலையில் எண் கணிதம் அமைந்துள்ளது. இதிலிருந்து தலையெழுத்தை நிர்ணயம் செய்வது யார் என்று தெரிந்திருக்கும்.


No comments:
Post a Comment